கண்ணாடி முன்நின்று பார்த்தேன்
நீங்கள் சொல்வதுபோல்
நானொன்றும் அழகில்லை
நீங்களோ
மிக மிக அழகு என்று
அழகற்றவனிடம்
அழகானவள்
கூறிச் சிலிர்ப்பது
காதல்

3 comments:

புன்னகையரசன் said...

என் செல்லக்கிளி அவ்வப்போது சொல்வதுண்டு... போங்க ஆசான் பெரு மூச்சு விட வைக்காதீங்க....

சிவா said...

கவிதை மிக அழகு

அன்புடன் நான் said...

உண்மையிலும் அழகுத்தான் கவிதை.