துடித்துருகும் ஏக்கப் பொதிகளை
உயிர்ப் பூக்களாய்க் கோத்து
அகிம்சை நெறியில்
ஒன்றன்பின் ஒன்றாகச் சாகக்கொடுக்கிறேன்
நான் உன் காதலுக்காக

நீயோ
என் நிம்மதிக் குஞ்சுகளை
உன் அலட்சியத் தூண்டில்களில் கொய்து
அவை துடிக்கத் துடிக்க
இதய நீருக்கு வெளியே எறிந்துவிட்டு
நித்திரை கொள்ளப் பார்க்கிறாய்

3 comments:

வானம்பாடிகள் said...

ரொம்பப் பிடித்திருக்கிறது. :)

பூங்குழலி said...

ஒன்றன்பின் ஒன்றாகச் சாகக்கொடுக்கிறேன்

நான் உன் காதலுக்காக,அலட்சியத் தூண்டில் ,
இந்த சொல்லாடல்கள் நன்றாக இருக்கின்றன .

சிவா said...

சாதரணமாக காதலில் நடக்கும் விஷயத்தை அழகாக சொல்லி விட்டீர்கள் ஆசான்