உன் விழிகண்ட பின்தான்
தெரிந்துகொண்டேன்
அதுவரை நான்
குருடனாய் இருந்தேன் என்று

உன் முத்தம்பெற்ற பின்தான்
உணர்ந்துகொண்டேன்
உன் இதழ்களில்
தாய்ப்பால் சுரக்குமென்று

உன்னைக் கூடிக்கலந்த பின்தான்
அறிந்துகொண்டேன்
நான் ஒவ்வொருமுறையும்
பிறக்கிறேனென்று

2 comments:

சாந்தி said...

காதலில் திருப்தி கண்டவருக்கு சரி அடுத்து என போய்க்கொண்டே இருப்பார்களாயிருக்கும்...சாதாரண மனிதர்

அதை நின்று நிதானமாய் ரசிக்க கவிஞர்களுக்கு மட்டுமே இயலுவதேன்.?:)

நல்ல ரசனை..( ஆனால் என் குழந்தையை நினைத்து வாசித்தால் இன்னும் சிறப்பாக இருக்கு..மன்னிக்கணும் கவிஞர்..):)

--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

பூங்குழலி said...

உன் முத்தம்பெற்ற பின்தான்
உணர்ந்துகொண்டேன்
உன் இதழ்களில்
தாய்ப்பால் சுரக்குமென்று

அருமை