எங்கே தவிப்போ
அங்கேதான் வாழ்க்கை ஆரம்பமாகிறது

எங்கே நிம்மதியோ
அங்கேதான் வாழ்க்கையின் அர்த்தம்
விளங்கிப்போகிறது

நீ என் தவிப்பு
நீ என் நிம்மதி
நீ என் வாழ்க்கை

என் உயிரின் சமாதானம்
உன் விழிகளுக்குள்
புதைந்துகிடக்கின்றன

உன் மடிகளில் மகிழ்ந்த
ஒவ்வொரு நொடியும்
என் சாவிலும் என்னைப் பிரியாது

6 comments:

பூங்குழலி said...

அவள் என் தவிப்பு
அவள் என் நிம்மதி
அவள் என் வாழ்க்கை

தவிப்பு ,நிம்மதி என்று இரண்டையும் வாழ்க்கையுடன் பொருத்தி விளக்கி ,இரண்டும் அவள் ,வாழ்க்கையும் அவள் என்று சொன்ன விதம் அழகு புகாரி

இஸ்மாயில் said...

ஒரு நல்ல ரசிகன் மட்டுமே கவிஞன் ஆக முடியும்...

நீங்க பரம ரசிகன் அப்படினு நிருபிக்கறீங்க...

உங்களால நான் காதலிச்சே ஆகனும் போல இருக்கு...

வில்லன் said...

நான் ரொம்ப நாளா முயல்கிறேன்,

ம்ம்ம் ப்ராப்தம் இல்லை போல,

இஸ்மாயில் said...

வில்லன் சார் காதலிக்கவா... இல்லா காதல் கவிதை எழுதவா....

வில்லன்னா நாலு அல்லது அஞ்சு இருக்கனுமே....

விஷ்ணு said...

காதல் காதல் காதல் ...
அருமை அருமை ஆசானே ...

அன்புடன்
விஷ்ணு ..

nila said...

//என் உயிரின் சமாதானம்
அவள் விழிகளுக்குள்
புதைந்துகிடக்கின்றன//

arumai... :)