என் அடர்த்தியான அன்பு மழையில்
இதயம் மூழ்க நனைந்திருக்கிறாய்
என் நீண்ட நெடும் பாச நதியில்
உணர்வு விரித்து நீந்தியிருக்கிறாய்
என் பேராழக் காதல் கடலுக்குள்
உயிர் சிலிர்க்க முக்குளித்திருக்கிறாய்
உனக்காகக் கரைந்துருகும்
என் கண்ணீர் அருவியில்
நெகிழ்ந்து நெகிழ்ந்து பிறந்திருக்கிறாய்

எங்கே செல்வாய்
என்னைத் தேடி அழப்போகிறாய்
உன்னைத் துறத்தும் இதய நினைவுகளை
அவசரமாய் மிதித்து மிதித்து
எத்தனை தொலைவுதான் நடக்கவியலும்
களைத்துப்போவாய்
என்னைக் காணத் துடித்துப்போவாய்

நான் காத்திருக்கிறேன் பெண்ணே
ஏன் சென்றாய் என்ற கேள்வி இருக்காது
பொன்முகம் நிமிர்த்தி என்னானது என்றுகேட்டு
என் விழிகளில் வினாக்குறி விரியாது

வருவாய்
வந்ததும் மடிகிடத்துவேன்
வானம் கொள்ளாப் பேரானந்தத்தை
கண்ணெனும் கிண்ணிகளில் நிரப்பி
என் உயிர் பிரியும் நாள்வரை ஊட்டிவிடுவேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

5 comments:

நதியானவள் said...

அருமையான கவி....சொல்ல வார்த்தைகள் இல்லை....

ஆயிஷா said...

ரொம்ப தாராள மனசு உங்களுக்கு ஆசான். உங்கள் காதலியும் பக்கியசாலி தான்.

அன்புட‌ன் ஆயிஷா

புன்னகையரசன் said...

என் அடர்த்தியான அன்பு மழையில்
இதயம் மூழ்க நனைந்திருக்கிறாய்
என் நீண்ட நெடும் பாச நதியில்
உணர்வு விரித்து நீந்தியிருக்கிறாய்
என் பேராழக் காதல் கடலுக்குள்
உயிர் சிலிர்க்க முக்குளித்திருக்கிறாய்
உனக்காகக் கரைந்துருகும்
என் கண்ணீர் அருவியில்
நெகிழ்ந்து நெகிழ்ந்து பிறந்திருக்கிறாய்


வாவ் என்ன வரிகள்...


எங்கே செல்வாய்
என்னைத் தேடி அழப்போகிறாய்
உன்னைத் துறத்தும் இதய நினைவுகளை
அவசரமாய் மிதித்து மிதித்து
எத்தனை தொலைவுதான் நடக்கவியலும்
களைத்துப்போவாய்
என்னைக் காணத் துடித்துப்போவாய்


அவளுள்ளிருக்கும் காதலை உணர்ந்து கொள்வாள் என்று உணர்ந்து இருக்குறீர்கள்...

நான் காத்திருக்கிறேன் பெண்ணே
ஏன் சென்றாய் என்ற கேள்வி இருக்காது
பொன்முகம் நிமிர்த்தி என்னானது என்றுகேட்டு
என் விழிகளில் வினாக்குறி விரியாது


மொளன ராகம் மோகன் நினைவுக்கு வருகிறார்...

இப்படியல்லவா இருக்க வேண்டும் காதல்... காதலன்... பெண்கள் கொடுத்து வைத்தவர்கள்

வருவாய்
வந்ததும் மடிகிடத்துவேன்
வானம் கொள்ளாப் பேரானந்தத்தை
கண்ணெனும் கிண்ணிகளில் நிரப்பி
என் உயிர் பிரியும் நாள்வரை ஊட்டிவிடுவேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்காதலிக்கிறேன் உன்னை எப்பொதும்...

இந்த வார்க்டைகள் போதாதா... இன்னும் என்ன சொல்ல வேண்டும்...

சிவா said...

எங்கே செல்வாய்
என்னைத் தேடி அழப்போகிறாய்
உன்னைத் துறத்தும் இதய நினைவுகளை
அவசரமாய் மிதித்து மிதித்து
எத்தனை தொலைவுதான் நடக்கவியலும்
களைத்துப்போவாய்
என்னைக் காணத் துடித்துப்போவாய்


படிக்கும் போதே இதயம் பிசைகிறது ...


வருவாய்
வந்ததும் மடிகிடத்துவேன்
வானம் கொள்ளாப் பேரானந்தத்தை
கண்ணெனும் கிண்ணிகளில் நிரப்பி
என் உயிர் பிரியும் நாள்வரை ஊட்டிவிடுவேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்


இப்போது இனிக்கிறது

சத்ரியன் said...

//வருவாய்
வந்ததும் மடிகிடத்துவேன்
வானம் கொள்ளாப் பேரானந்தத்தை
கண்ணெனும் கிண்ணிகளில் நிரப்பி
என் உயிர் பிரியும் நாள்வரை ஊட்டிவிடுவேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்...//

புகாரி,

காதல். ம்ம்ம்ம்ம்...!!!!
நல்ல வளமானச் சொற்கள்.

வேதனைதான் என்றாலும், வருடும் வரிகள்....!