காதலென்பதோர் வினோத யுத்தம்
அது நிகழும்போது
விழிகள் விரிந்து
எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் சிதறும்
பொன்வானமாகிறது
ரத்தம் புத்துணர்வு அலைதெறிக்கும்
புதுவெள்ளம் ஆகிறது
உயிர் ஓர் யுகத்திற்கான
பெருஞ்சக்தியாய் உரமேற்றப்படுகிறது

யுத்தம் தடைபட்டாலோ
விழிகள் திரவமாகிவிடுகின்றன
ரத்தம் பித்தமாகிவிடுகிறது
உயிர் சொல்லிக்கொள்ளாமல்
மயான வெளி தேடிப்
பறந்தே போய்விடுகிறது

4 comments:

சிவா said...

காதலை பற்றிய அருமையான விளக்கம் ஆசான்

சீனா said...

காதலினையும் காதல் தோல்வியினையும் அழகாக விவரிக்கும் கவிதை நன்று நண்ப புகாரி

நல்வாழ்த்துகள்

ஆயிஷா said...

ரசித்தேன்.

பூங்குழலி said...

உயிர் சொல்லிக்கொள்ளாமல்
மயான வெளிதேடிப்
பறந்தே போய்விடுகிறது

அருமையான வரிகள் ..."சாகத் தோணுதே "என்று இழையும் ஜோதிகாவை நினைவுப்படுத்துகிறது .