உன்
பிரியத்தைப் பிரிவிலும்
நெருக்கத்தைப் பொறாமையிலும்
காதலைக் கண்ணீரிலும்
மோகத்தை முத்தத்திலும்
கண்டுபிடித்தேன்
என்
ஆசைத் துடுப்புகளோடு
உன் இதயம் கண்டுபிடிக்க
நான் பயணப்பட்டபோதுதான்
என் நெஞ்சக் கப்பல்
உன் மகா சமுத்திரப்
புயலில் சிக்கித் தவிக்கிறது
4 comments:
வாவ்...அழகிய கவிதை புகாரி...வரிகள்
மிகவும் இனிமையா இருக்கு...
இந்தக் கவிதையை உங்க கவிதை நூலில் கண்டிப்பா போடுங்க...
அன்புடன்...
வாணி
உன்
பிரியத்தைப் பிரிவிலும்
நெருக்கத்தைப் பொறாமையிலும்
காதலைக் கண்ணீரிலும்
மோகத்தை முத்தத்திலும்
கண்டுபிடித்தேன்
ஹ்ம்ம்ம்ம் கண்டுபிடிச்சிட்டீங்களா?
என்
ஆசைத் துடுப்புகளோடு
உன் இதயம் கண்டுபிடிக்க
நான் பயணப்பட்டபோதுதான்
என் நெஞ்சக் கப்பல்
உன் மகா சமுத்திரப்
புயலில் சிக்கித் தவிக்கிறதடீ
ஹ்ம்ம்ம்ம் நல்ல கவிதை புகாரி. கவிதை மழையா பொழிகிறது உங்க உள்ளத்திலே... ! நாங்க படிச்சுட்டே இருக்கோம்...
--
மிக்க அன்புடன்
வேல்
அருமையான கவிதை ஆசான்
மிகவும் நல்ல கவிதை புகாரி… ஆனால் கடைசி வரியில் உள்ள தவிக்கிறதடீக்கு
பதிலாக தவக்கிறது என நிறுத்தி இருந்தால் இரு பாலருக்கும் பொதுவாக
அமைந்திருக்கும். கவிதை இன்னும் நன்றாய் அமைந்திருக்கும் என நான்
நினைக்கிறேன்… எப்படி இருந்தால் நன்றாய் இருக்கும் என நான் சொல்லத்
தேவையில்லை உங்களுக்கு… ஏதோ என் மனதில் பட்டது… அவ்வளவுதான்…
Post a Comment