நீ மட்டும்தான் வேண்டும் என்று
நான் நிற்பதுபோல்
நான் மட்டும்தான் வேண்டும் என்று
நீ நின்றால்

அன்று வா
அதுவரை சென்று வா

“மட்டும்தான்”
என்ற நம்பிக்கைதான் கடவுள்

”மட்டும்தான்”
என்ற உணர்வுதான் காதல்

7 comments:

சக்தி said...

அன்பின் நண்பர் புகாரியே

மட்டும்தான் என்ற சொல்லின் மகத்துவத்தை விளக்கியதோ இக்கவிதை ?


>>“மட்டும்தான்” என்ற நம்பிக்கைதான்
கடவுள்


”மட்டும்தான்” என்ற உணர்வுதான்
காதல் >>


அன்புடன்

சக்தி

மயூ மனோ (Mayoo Mano) said...

கவிகளால் உயிர் "மட்டும்" தொட எப்படி முடிகிறது உங்களால்?

சாந்தி said...

நன்று.. ஆனால் இந்த " மட்டும்தான் " காதல் பெண்ணுக்கு அவள் குழந்தை மீது
" மட்டும்தான்" வரும்போல...திருமணத்துக்கு பின்.

பாசம் என்றால் எல்லோர் மீதும்..

காதல் மட்டுமே " மட்டும்தான்"..

Unknown said...

சாந்தி,

பெண் தன் குழந்தைகளுக்கென்றே ஆகிவிடுவது இயல்பு என்றாலும், கணவனின் மீது குழந்தைகள் பிறக்கும்முன் எத்தனை காதல் கொண்டிருந்தாலோ அதனினும் அதிகமான காதல் கொள்ள வேண்டும். தன் பிள்ளைகளுக்குத் தகப்பனும் அவனே அல்லவா? ஆகவே காதல் இரட்டிப்பாகத்தானே ஆகவேண்டும். இதை ஆண்களுக்குப் பரிந்துகொண்டு நான் பேசவில்லை. பெண்ணின் நல்வாழ்வுக்காகவே சொல்கிறேன். கணவனை முந்தானையில் முடிந்துவைத்துக்கொள்ளாத பெண் இழப்புகளையே சந்திக்கிறாள்

அன்புடன் புகாரி

துரை said...

மட்டும் செயித்து
விலங்கு மாட்டும் நாளில்
காதலங்கு இசை மீட்டும்

சாந்தி said...

மிகச்சரி.. மாற்றுக்கருத்தே இல்லை ஆசான்.. ஆனால் எப்ப ஒரு குழந்தை தாயை
மட்டும் தேடி வருது..? தந்தைக்கு தாயைப்போல குழந்தையோடு நேரம் செலவழிக்க
பொறுமை இல்லாதபோது.. அதனால் அவள் குழந்தைக்கு முன்னுரிமை தரவேண்டிய
கட்டாயம்..

அதே போல மனைவியின் ஆச பாசம், சொந்தங்களை மதிக்கும்போது அவளுக்கு கணவன்
மீது தனி மரியாதை ஏற்படுகிறது..

ஒரு கணவன் மனைவியை குழந்தைகளை மதித்து நேரம் செலவிடும்போது மட்டுமே
வெற்றி பெருகிறான்.. அவன் சம்பாத்யம் மட்டும் வெற்றியை ஒருபோதும்
தருவதில்லை..


அதுபோல கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மனைவி மறப்பதில்லை.. அப்படியும்
அவள் மறக்கிறாள் என்றால் , ஒன்று அவன் கொடுமை அதைவிட அதிகமாக இருக்கணும்,
இல்லை அவள் கல்நெஞ்சக்காரி /சுயநலக்காரியாக/ஆடம்பர விரும்பியாக
இருக்கணும்..



--
சாந்தி

Unknown said...

>>>>>மிகச்சரி.. மாற்றுக்கருத்தே இல்லை ஆசான்.. ஆனால் எப்ப ஒரு குழந்தை தாயை
மட்டும் தேடி வருது..? தந்தைக்கு தாயைப்போல குழந்தையோடு நேரம் செலவழிக்க
பொறுமை இல்லாதபோது.. அதனால் அவள் குழந்தைக்கு முன்னுரிமை தரவேண்டிய
கட்டாயம்..<<<<<<<<<

நிச்சயமாக முன்னுரிமை தரவேண்டும். அதையே கணவனும் விரும்புவான். ஆனால் முன்னுரிமை என்று 24 மணி நேரதையும் கொடுப்பது பிரச்சினையைத்தரும்.

தந்தைக்குப் பொறுமை இல்லை என்பதை நான் ஏற்கமாட்டேன். நான் முழு நேரமும் செலவிழிப்பேன். என்னைப்போல் உள்ளவர்களே இன்றைய தந்தையர்கள். கடந்த தலைமுறைதான் குழந்தைகளைக் கண்டு கொள்ளாதவர்கள்.

சில காரியங்களை தந்தை செய்வதைவிட தாய் செய்வதே சரியாக இருக்கும் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். பணிவிடை என்பதே பெண்ணின் தனித்துவம்தான். அவளுக்கு இணை அதில் யாருமே இல்லை.

ஆகவே குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். ஆனால் கணவன் மீதான காதலைப் பிடுங்கிவிடாதீர்கள். கணவனையும் குழந்தை வளர்ப்பில் ஈடுபடுத்துங்கள். உங்களுக்கு ஒண்ணும் தெரியாது ஒதுங்குங்க என்று சொல்லிவிடாதீர்கள்.

இன்றைய குழந்தைகள் தாயிடம் தந்தையின் அறிவையும் பெறுகிறார்கள். தந்தையிடம் தாயின் பணிவிடையும் பெறுகிறார்கள். நாளை எப்படியோ :)


>>>>அதே போல மனைவியின் ஆச பாசம், சொந்தங்களை மதிக்கும்போது அவளுக்கு கணவன்
மீது தனி மரியாதை ஏற்படுகிறது..<<<<

நிச்சயமாக. பெண் தன்னை மதிப்பதைவிட தன் உறவுகளை மதிப்பதையே கணவனிடமிருந்து பெரிதும் எதிர்பார்க்கிறாள். இது கணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிய விசயம். அதே சமயம், அவளின் உறவுகள் கணவனை தன் மகளையும்விட அதிக அக்கறையும் அன்பும் மரியாதையும் கொண்டு பார்க்கவேண்டும் நடத்தவேண்டும் என்பதும் அவசியம்.

மருமகளையும் மருமகனையும் மகளாயும் மகனாயும் பார்க்த்தாத பெற்றோர்கள் நல்லவர்கள் இல்லை!


>>>>ஒரு கணவன் மனைவியை குழந்தைகளை மதித்து நேரம் செலவிடும்போது மட்டுமே
வெற்றி பெருகிறான்.. அவன் சம்பாத்யம் மட்டும் வெற்றியை ஒருபோதும்
தருவதில்லை..<<<<

உண்மை. இன்றெல்லாம் குடும்பம் அப்படித்தான் இருக்கிறது. குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் என் போன்றோரின் குடும்பம் அப்படித்தான். என் பிள்ளைகள் என் மடியில் கிடந்து என் உயிரில் தவழ்ந்து வளர்ந்தவர்கள். ஆனாலும் அம்மாதான் அவர்களுக்கு உசத்தி :) ஆண்கள் பாவம்.


>>>>அதுபோல கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மனைவி மறப்பதில்லை.. அப்படியும்
அவள் மறக்கிறாள் என்றால் , ஒன்று அவன் கொடுமை அதைவிட அதிகமாக இருக்கணும்,
இல்லை அவள் கல்நெஞ்சக்காரி /சுயநலக்காரியாக/ஆடம்பர விரும்பியாக
இருக்கணும்..<<<<

நீங்கள் கோபிக்கக்கூடாது. பெண் ஒரு நாள் நீ எனக்கு என்னத்தை செய்திட்டே என்று கண்டவனை வாய் கூசாமல் கேட்டுவிடுகிறாள் என்பது உண்மை சாந்தி.

அன்புடன் புகாரி