உனக்கு யார்தான்
தமிழ் சொல்லிக் கொடுத்தார்களோ
தெரியவில்லை
பக்கத்தில் உட்கார் என்றால்
உனக்குப் புரிவதே இல்லை
மடியில் வந்து உட்கார்ந்துகொண்டு
பக்கம் என்றால் மடிதானே
என்று சண்டைக்கு வருகிறாய்

1 comment:

புன்னகையரசன் said...

ஆசான்,
இது சரியல்ல... தனித்திருக்கும் என்னை உங்கள் கவிதை ரொம்ப தான் படுத்துகிறது...
அருமை ஆசான்....