தலை துளைத்த
ஆத்திர அதிரடிப் புயலின்
அவசரச் சீற்றத்தில்

உயிரின் உட்கருவும்
அணு உலையில் அகப்பட்டு
கொதித்த கணங்களில்
கொட்டிய மலச் சொற்களை

மறதித்
துடைப்பத்தால் பெருக்கி
மன்னிப்புக்
குப்பையில் இட்டுவிட்டு
ஏற்றுவோம்
மீண்டும் வாழ்க்கைத் தீபம்

தீபம் மட்டுமே
ஞாபகத் திரியில் ஏற்றுவதற்கு
என்றென்றும் ஏற்ற ஒன்று

2 comments:

சிவா said...

உண்மை தான் ஆசான்.. வார்த்தைக்கு வார்த்தை .. அடிக்கு அடி என்று சென்றால் முடிவே இல்லை

புன்னகையரசன் said...

நல்ல புத்திமதி... அழகாக சொல்லி இருக்கிறீர்கள் ஆசான்....