காற்று பெண்
நெருப்பு ஆண்

துணையோடு எரியும்
துணைகேட்டு எரியும் நெருப்பு
தூண்டித் தூண்டிவிடும்
தூண்டப்பட்டு அலையும் காற்று

நிலம் பெண்
நீர் ஆண்

நிலத்தடி தேடியே நீர் பாயும்
நெருப்பிதழ் தீண்டி காற்றுத் தோள் பற்றி
ஆகாய மடிகளில் உறங்கிப்போனாலும்
நீர் ஆசையாய் ஓடிவரும்
நிலமே நிலமே என்று

நீர் வேண்டியே
நிலம் வெடித்துக் கிடக்கும்
நீரைக் கலந்தே உயிர்கள் ஈனும்

ஆகாயம் என்பதோ
ஆணும் பெண்ணும் இணைந்த
முழுமை

ஒன்றே ஒன்றென ஒன்றிக் கலந்ததில்
ஈடில்லா அமைதி
இடரில்லா நிம்மதி
உயிர் பூத்த
உச்சம்

4 comments:

சிவா said...

பொருள் மிகுந்த காதல் கவிதை ஆசான்

பிரசாத் said...

மிகவும் நன்றாக உள்ளது உவமை...

பூங்குழலி said...

ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் தேவை என்பதை அழகாக கவிதையாக்கியிருக்கிறீர்கள் புகாரி...

சுவாமிநாதன் said...

உவமைகள் அருமை.

இதைத்தான் பத்திக்கிச்சு, பத்திக்கிச்சு என்கிறார்களோ ?