கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துகொண்டே இருக்கிறது

உன்மீதான நம்பிக்கை
வற்றிக்கொண்டே
விழி இருட்டுகிறது

ஏமாற்றினாலும்
என்னுடையவன் என்று
என் காதல் வலுப்பெறுகிறது

இருந்தும்
கண்களிலிருந்து கண்ணீர்
வழிந்துகொண்டேதான் இருக்கிறது

2 comments:

பூங்குழலி said...

நம்பிக்கை வற்ற கண்ணீர் பெருக நல்லா இருக்கு புகாரி

சிவா said...

ஏமாற்றினாலும்
என்னுடையவன் என்று
என் காதல் வலுப்பெறுகிறது

ஹ்ம்ம் .. இந்த நிலை கொஞ்சமா மாறி வருகிறது ஆசான்