உன் மனதின் மௌனத்தைப்
பதிவு செய்துகொண்டே
முன்னேறுகிறேன் நான்
பின்னொருநாள்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான் அப்படி
நினைக்கவே இல்லையே என்று
உன் மனம் என்னிடம் மொழிந்ததைத்
தெளிவாகக் கேட்டேனே என்று வாதிடுவது
எனக்கே மடத்தனமாய்த் தோன்றுகிறது
எனக்கும் அந்தச் சாதுர்யத்தைக்
கற்றுத்தந்துவிடாதே கிளியே
மனதோடு மனதாக மட்டுமே
இழைய விழைகிறேன் நான் உன்னுடன்
உன் செடிகளின் நிஜமான பூக்களில்
தொட்டுத் துடித்துச் சிறகசைப்பதே
என் வண்ணத்துப் பூச்சிகள்
அதற்கு உன் மௌனமே போதும்
பேசுகிறேனென்று பொய்கள் வேண்டாம்
4 comments:
வாவ். அசத்திட்டீங்க. உங்க காதலி ரசிக்கிறாங்களோ இல்லையோ நாங்க ரசிப்பதில் முந்திக் கொண்டோம் ஆசான்.
உன் செடிகளின் நிஜமான பூக்களில்
தொட்டுத் துடித்துச் சிறகசைப்பதே
என் வண்ணத்துப் பூச்சிகள்
அர்த்தம் புரிந்து கொள்ள சிரமப்பட்டாலும் வரிகள் தனி அழகு.
மெளனம் சம்மதத்துக்கு அறிகுறி தானே ஆசான். அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் வாய் திறந்து சம்மதம் சொல்லிவிட மாட்டார்கள். ஆறு அது ஆழமில்ல. அது சேரும் கடலும் ஆழமில்ல. ஆழமிது ஐயா இந்தப் பொம்பள மனசுதான்யா.
அன்புடன் ஆயிஷா
உன் மனதின் மௌனத்தைப்
பதிவு செய்துகொண்டே
முன்னேறுகிறேன் நான்
பின்னொருநாள்
எளிதாகச் சொல்லிவிடுகிறாய்
நான் அப்படி
நினைக்கவே இல்லையே என்று
எங்கேயோ.. உணர்ந்த நினைவு
மௌனம் என்பது காதலின் சிறப்பு மொழி தான் - ஐயமே இல்லை
அருமைக் கவிதை - அதிலும் ஐயமே இல்லை
நல்வாழ்த்துகள் நண்ப புகாரி
அழகு ஆசான்.. அருமை...
என்ன சொல்லுங்க... பெண் மனசு நல்ல தெரிஞ்சு வச்சு இருக்கீங்க....
இது தான் இப்போ நடக்குது....
Post a Comment