எத்தனை பெரியவனாய்
இருந்தும் என்ன
உன்
சர்க்கரைத் தோட்டத்தில்
சித்தெறும்புதானே
நான்

6 comments:

சிவா said...

அழகு ஆசான்

பூங்குழலி said...

சர்க்கரைத் தோட்டம் என்றால் சித்தெறும்பு கூட்டமே இருக்காதா ?
அதில் ஒரு எறும்பு ?அழகான கவிதை

அன்புடன் புகாரி said...

//சர்க்கரைத் தோட்டம் என்றால் சித்தெறும்பு கூட்டமே இருக்காதா ?//

ஆமாம் பூங்குழலி
நிச்சயமாக இருக்கும்
ஆனால் சர்க்கரைத் தோட்டத்தின் கூர்கா இந்த ஒரே ஒரு எறும்புக்குத்தான் அனுமதி தரவேண்டும் என்பது சர்க்கரைத் தோட்டத்தின் கெடுபிடியான கட்டளையாம்

புன்னகையரசன் said...

கடிக்கிற சித்தெறும்பா ஆசான்....

என்ன கடிச்சது உங்க கவிதை சித்தெறும்பு...

அன்புடன் புகாரி said...

கடிப்பதுபோல் நடிக்கிற சித்தெறும்பு புன்னகையரசன் :)

ஆயிஷா said...

ஆசான் குட்டியாய் ஒரு கவிதை. கொள்ளை போனது மனது.

அன்புடன் ஆயிஷா