உனக்காகவே
படைக்கப்பட்டவளின்
உயிர் உரசும்போதுதான்
சுகத்தில் இதயம்
வலிக்க வலிக்க நீ பிறக்கிறாய்
அதுவரை வெறுமை எனும்
கர்ப்ப இருட்டில்
கருவாகத்தான் இருக்கிறாய்

4 comments:

செல்வன் சம்பத் said...

அருமை.

சீதாம்மா said...

உயிர்க் கலப்பில்
உடல் உரசலில் கரு உருவாகும்
அதுவரை அது அணுவே
உயிரின் தொடக்கம்
கர்ப்பகிரகத்தில் உருவாகும் கருவே
வெளி எட்டிப் பார்ப்பது அடுத்து

சாந்தி said...

உனக்காகவே
படைக்கப்பட்டவளின்
உயிர் உரசும்போதுதான்
சுகத்தில் இதயம்
வலிக்க வலிக்க நீ பிறக்கிறாய்

நல்ல சொல்லாடல்.

சீனா said...

உண்மை புகாரி

நம் உயிர் நமக்காகப் பிறந்தவளினால் உரசப்படும் போதுதான் காதல் வலியுடன் பிறக்கும்

நல்வாழ்த்துகள் நல்ல கவிதைக்கு நண்ப புகாரி

நட்புடன் ..... சீனா
---------------------------------