வகுந்தெடுத்ததாய்
மிளிரும் உன் அதரங்களில்
என் காதல் தேன் அருந்துவதை
தேக்கடியில் காணலாம்

திறந்துகிடக்கும் தோட்டமாய்க்
கவரும் உன் மேனியில்
என் காதல் கொடி ஊர்வதை
ஊட்டியில் காணலாம்

என் தலைமுடியை
உன் பொன் விரல்கள்
காதலாய்க் கோதுவதை
குற்றாலத்தில் காணலாம்

1 comment:

புன்னகையரசன் said...

வேற வழியே இல்லை ஆசான்... உடனே விடுப்பு எடுத்துக் கொண்டு ஊருக்கு போகனும்....