ஒரு துளி
கண்ணீர் கசிந்தாய்
நீ என்முன்
காலமெல்லாம் கண்ணீரானேன்
நான் உன்முன்

ஒரு துளி பருகி
ஏழுகடல் தருவது என் காதல்

உன் கண்ணீருக்குள்
கட்டிக்கொண்ட கூட்டுக்குள்
என் கண்ணீர்மட்டும்தான்
இன்று நீயாக

Comments

கவிதை மிக அருமை...
சீதாம்மா said…
காதல் என்பதே ஓர் ஏமாற்று வித்தையோ
காதல் காதல் காதல்
காதல் இல்லையேல் சாதல்.
இப்படிப்பேசிப் பேசி
கவிதையாய் எழுதி
மனிதனைப் பைத்தியமாக்கியது
காதலா மனிதனா
உயிர்க் காதலன்கள் இந்தப் பக்கம்
உயிர்க் காதலிகள் அந்தப் பக்கம்
இவர்கள் இணையாமல் வாழ்க்கை எல்லாப்பக்கமும்
அது காரணமாக இருக்குமோ சீதாம்மா?
தருமி said…
கவிதையெல்லாம் எனக்குத் தெரியாதுங்க. ஆனால் அந்த ஒரு கண்ணின் படம் வசீகரம், அழகு.
தருமி said…
அதோடு, அது நம்ம ஊர் கண்; இல்ல? அதுவும் நீங்கள் எடுத்ததுதானா?
தருமி சார்,

அந்தக் கண்கள்தான் உங்களுக்கான கவிதை :) ஆனால் அதை நான் சுட்டெடுத்தேன். உங்கள் பாராட்டுக்கள் யாரோ முகம்தெரியாதவருக்குத்தான்.

கொஞ்சம் என் கவிதைகளையும் மெதுவா வாசித்துப் பார்க்கலாமே :)

மதம் கடவுள் பற்றியெல்லாம் கொஞ்சம் எழுதி இருக்கிறேனே :)

அன்புடன் புகாரி
தருமி said…
கொஞ்சம் என் கவிதைகளையும் மெதுவா வாசித்துப் பார்க்கலாமே :)

அடடா.. வாசித்துப் பார்க்கலாமலா கண்ணுக்குப் போனேனென்று நினைத்தீர்கள்?! அப்படியெல்லாம் இல்லை .. கவிதைகளுக்குள் இருக்கும் ஈரம் தட்டுப்பட எனக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். இப்போ கூட பாருங்களேன் நீங்கள் சொல்லியுள்ள - //காலமெல்லாம் கண்ணீரானேன்
நான் உன்முன் // - என்பது நான் இன்னும் அழுதுகொண்டே இருக்கிறேன் - காதலில் வெற்றி பெற்ற பின்பும்கூட என்பது போல் எனக்குத் தோன்றுகிறது.

இதனால்தான் விட்டு விடுகிறேன்!!!
தருமி சார்,

காதலில் வெற்றி என்று கவிதை சொல்வதாய் இல்லையே !

அதோடு வெற்றி பெற்றிருந்தாலும் கண்ணீர் என்பது கருணையின் அடையாளமாகிவிடும்.

அன்புடன் புகாரி
தருமி சார்,

காதலில் வெற்றி என்று கவிதை சொல்வதாய் இல்லையே !

அதோடு வெற்றி பெற்றிருந்தாலும் கண்ணீர் என்பது கருணையின் அடையாளமாகிவிடும்.

அன்புடன் புகாரி
தருமி said…
இதுதான் வம்பை விலைகொடுத்து வாங்குவது / சனியனை எடுத்து பனியனுக்குள் விட்டுக் கொள்வது / சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்வது!!!!!!
தருமி சார்,

வம்பும் சனியனும் சூன்யமும் உங்களை அன்புடன் வரவேற்கின்றன. இனியெல்லாம் நீங்கள் என் கவிதைகளை வாசிக்கத் தகுதியானவராகிவிட்டீர்கள்.

அன்புடன் புகாரி
தருமி said…
//என் கவிதைகளை வாசிக்கத் தகுதியானவராகிவிட்டீர்கள்.//

class recognizes class !!

:)
பூங்குழலி said…
உன் கண்ணீருக்குள்
கட்டிக்கொண்ட கூட்டுக்குள்
என் கண்ணீர்மட்டும்தான்
இன்று நீயாக

அருமையாக இருக்கிறது
தஞ்சை மீரான் said…
ஒரு துளி
கண்ணீர் கசிந்தாய்
நீ என்முன்
காலமெல்லாம் கண்ணீரானேன்

நான் உன்முன் //

ஆம், இது ஆண்களுக்கே விதிக்கப்பட்ட விதி (என்ன செய்வது?) :-)

ஒரு துளி பருகி

ஏழுகடல் தருவது என் காதல்//

கடன் வாங்கியும், வட்டியோடு சேர்த்தும் கொடுத்தே பழக்கபட்டவன், என்ன செய்வான்? :-)

உன் கண்ணீருக்குள்
கட்டிக்கொண்ட கூட்டுக்குள்
என் கண்ணீர்மட்டும்தான்

இன்று நீயாக //

வளரட்டும் உங்கள் கண்ணீர், இன்னும் அதிகம் வரட்டும் உங்கள் கண்ணீருக்கான அழகு சொற்கள்/வரிகள். :-)

--
நட்புடன்
மீரான்
சீனா said…
பெண்களின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கும் ஆண்கள் காலமெல்லாம கன்ணீராவது இயல்பாக இன்றைக்கு நடக்கிறது

நல்வாத்துகள் புகாரி
வேல் said…
அன்பின் புகாரி,

காதல்னாலே கண்ணீர் தானோ?...

காதல் பற்றி அடிக்கடி கவிதை எழுதறீங்களே... ஒரு தொகுப்பு வெளியிட உத்தேசமோ?..

--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!
வேல் said…
>>>>பெண்களின் கண்ணீரைக் கண்டு மனமிரங்கும் ஆண்கள் காலமெல்லாம கன்ணீராவது இயல்பாக இன்றைக்கு நடக்கிறது

நல்வாத்துகள் புகாரி /நல்வாழ்த்துக்கள்<<<<

சீனா சார்...

வேகமா அடிச்சு போட்டுட்டீங்களா....

பெண்ணுக்கு அழுகை தான் ஒரு ஆயுதம்... அழுகையாலே சாதிப்பதும் நடந்திருக்கு... ஆண்கள் எப்பவும் ஜாக்கிரதையா இருக்கணும்..!--
மிக்க அன்புடன்
வேல்
ஊக்கமது கைவிடேல்!
வேல், ஆணின் ஒரு சொட்டுக் கண்ணீர் பெண்ணின் ஒரு கோடி சொட்டுக் கண்ணீரைவிட அடர்த்தியானது அளவில் பெரியது

அன்புடன் புகாரி

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ