முகர்ந்தாலே
வாடிவடுமாம் அனிச்சமலர்
நம் இலக்கியம் சொல்கிறது
மிகச் சிறுபொழுதே எனினும்
உன்னை நினைத்தாலே வாடிவிடும்
நீ என்ன மலர்
உன்னை வர்ணிக்கும் வரம்கேட்டு
நித்தம்
அத்தனை நாழிகைகளிலுமே
நானோர் சுகதவத்தில்
அமிழ்ந்திருக்கிறேன்

2 comments:

Anonymous said...

புகாரி,

கவிதையின் கருத்து நன்று.

மனோவேகம் மாற்றுப் பொருளின் வேகத்தை விட விரைவானதல்லவா ? ஊடகம் இன்றியே உயர்ந்து உரைப்பது உள்ளம் தானே !

அன்புடன் ..... செல்வி ஷங்கர்

பாச மலர் / Paasa Malar said...

அழகிய கற்பனை..