ஒரே அலைவரிசையில்
இரண்டு பாடல்கள் நீயும் நானும்
ஒரே பாடலில்
இரண்டு குரல்கள் நீயும் நானும்

ஒரே குரலில்
இரண்டு சொற்கள் நீயும் நானும்
ஒரே சொல்லில்
இரண்டு எழுத்துக்கள் நீயும் நானும்

ஒரே எழுத்தில்
இரண்டு கோடுகள் நீயும் நானும்
ஒரே கோட்டில்
இரண்டு புள்ளிகள் நீயும் நானும்

ஒரே புள்ளியில்
இரண்டாய் உருவாகி
ஒன்றாகிப்போன
தன்னந்தனி உலகம் நீயும் நானும்

13 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

அற்புதம்

சாந்தி said...

சிறப்பான சிந்தனை.

பூங்குழலி said...

அலைவரிசையிலிருந்து புள்ளிக்கு நெருங்கி ,புள்ளியிலிருந்து உலகமாக சூழ்ந்து ...அருமையான கவிதை

புன்னகையரசன் said...

எதோ விஞ்ஞான தியரி மாதிரி இருக்கு...

புரியுது... ஆனா புரியல....

விசாலம் said...

அன்பு புஹாரிஜி மிக அருமையான புள்ளிகளுடன் அருமையான கவிதைக்கோலம்

வாணி said...

வாவ்வ்வ்...மிகவும் அழகான கவிதை!!


அன்புடன்...
வாணி

காந்தி said...

சிறப்பான சிந்தனை.

--
சாந்தி


ஆமாம் புகாரி.

துரை said...

அன்பின் ஆசானே


நான் அடுத்தடுத்துக் கோலம்போட

வரிசையாய் புள்ளிவைத்து விடுகிறீகள்


உங்களுக்கேத் தெரியாமல்

என்னையும் அறியாமல்

உங்கள் தடம் தொடர்கிறேன் :)

சிவா said...

மிகவும் அருமை ஆசான்

சபூர் ஆதம் said...

ஒரே புள்ளியில்
இரண்டாய் உருவாகி
ஒன்றாகிப்போன
தன்னந்தனி உலகம் நீயும் நானும்



அதிசயமான தத்துவம் ஆனால் உண்மை

நச்சத்திரா said...

வாவ் வாவ் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.... (வாணிக்க்கா எனக்கு இத தவிர என்ன சொல்ல தெரியல... சோ... கொஞ்சம் இந்த வாவ் நான் யூஸ் பண்ணிக்குறேன்........)

மிக மிக எளிமையான அருமையான கவிதை ஆசான்.....

சாதிக் அலி said...

புஹாரி சார்,


நான் இழைகளுக்கு பதில் தர ஆரம்பிக்குமுன்னும் உங்கள் கவிதைகளை சத்தம் போடாமல் தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையை இரசிப்பது போல, பூவை பறிக்காமல் எட்ட இருந்து வாசத்தை நுகர்வது போல படித்து மகிழ்ந்திருக்கிறேன்.


பல கவிதைகளில்....


நீங்கள்


அணு விஞ்ஞானியாகியிருக்கலாம்
என்று நினைக்கத் தோன்றுகிறது.
///// ஒரே புள்ளியில்

இரண்டாய் உருவாகி
ஒன்றாகிப்போன

தன்னந்தனி உலகம் நீயும் நானும் ///// புஹாரி

வேந்தன் அரசு said...

ஒரே வீட்டில்
இரண்டு வானொலிகள் நீயும் நானும்

ஒரே வானொலியில்
இரண்டு அலைவரிசைகள் நீயும் நானும்

ஒரே மரத்தில்
இரண்டு கிளைகள் நீயும் நானும்

ஒரே கிளையில்
இரண்டு பூக்கள் நீயும் நானும்


இரண்டு பூவ்ம் ஒன்றிக்கலந்து
வீசும் ஒரே வாசம் நாம் இருவரும்



சே!
எனக்கு ஏன் முதலிலியே இப்படி எழுத தோணாம்ல் போச்சு?

--
வேந்தன் அரசு
சின்சின்னாட்டி
(வள்ளுவம் என் சமயம்)
”உண்மைதான் கடவுள் எனில், கடவுள் என் பக்கமே.”