ஒரு கவிதை எழுத
முதல்வரி தேடி
உன் பார்வைக்காகக் காத்திருந்தேன்
உன் பார்வை
வந்தவுடன்தான் தெரிந்தது
என் கவிதை முழுமையுமே
உன் பார்வை
மட்டும்தான் என்று

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

காதலியின் கடைக்கண் பார்வை மட்டுமே போதாதா ? கவிதை எழுதுவதற்கு. கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலயும் ஓர் கடுகாம்.
சிவா said…
அசத்தல் ஆசான்
சீனா said…
காதல் ரசம் சொட்டச் சொட்ட கவிதைகள் படைக்கும் கவிஞர் புகாரி வாழ்க
ஜெயபாரதன் said…
நண்பர் புகாரி,


இந்தக் கண் ஒற்றைக் கண்ணா ?
அல்லது
பெண்ணின் நெற்றிக் கண்ணா ?
காதலனை
வட்டமிடும் சுற்றுக் கண்ணா ?
இல்லை
பெற்று விட்ட வெற்றிக் கண்ணா ?
ஒற்றைக் கண்ணுள்ள பெண்
உலகில் இல்லை !
நெற்றிக் கண்ணுள்ள பெண்
நீ காண்ப தில்லை !
ஒற்றைக் காதலைக் காட்டும்
பொற்றா மரையா ?
ஒற்றை ஆக்கிய
இரட்டைக் கண்ணா ?
பூவா ? மொட்டா ?
கருகிய மலரா ?


சி. ஜெயபாரதன்
சீனா said…
எந்தக் கண்ணாயினும் பார்வை பட்டால் பரிதவிக்கும் மனிதர்கள் பலர்

முடிவு என்ன ஆகும் எனத் தெரியாமல் முடிந்த வரை காதலிப்பவர்கள் பலர்
கடைசிவரை சுவாசிப்பதால்தானே அதற்குப் பெயர் உயிர் :)
ஆயிஷா said…
முதல் வரி முழு வரியும் ஆகிவிட்டதோ ஆசான்........கவிதை வழமை போல் அழகு.
அன்புடன் ஆயிஷா

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்