உன்னைப் பருக வரும்
நதி நான்
என்னில் நீந்த வரும்
கடல் நீ

உன்னைத் திறக்க வரும்
பூட்டு நான்
என்னைத் திறந்து நிற்கும்
அறை நீ

8 comments:

தஞ்சை மீரான் said...

அழகு.

ஆனாலும் இது பெண்களுக்கு ஆண்கள் வைக்கிற மகா ஐஸ் :-)

ஆணின் தன் அடக்கம் பெண்ணின் முன்பே எப்பொழுதும். :-)

பெண் கடலாம்
ஆண் வெறும் நதிதானாம்

பெண் அறையாம்
ஆண் வெறும் பூட்டுதானாம்

(உன் சமையலறையில் நான் உப்பா? சக்கரையா? அந்த பாட்டுதான் நினைவுக்கு வருகிறது)




--
நட்புடன்
மீரான்

Unknown said...

மீரான்,

இந்தக் கவிதையின் வார்த்தை ஜாலம் கொஞ்சம் சுவாரசியமானது!

>>>உன்னைப் பருக வரும் நதி நான்<<<

நீரைத்தான் பருக முடியும். ஆனால், நதியோ அவளைப் வருகிறேன் என்கிற்து
அதாவது நான் நதியாக இருந்தாலும் எனக்கு உன்மீது தாகம். உன்னைப் பருகினால்தான்
நான் வற்றாமல் இருப்பேன்.


>>>என்னில் நீந்த வரும் கடல் நீ<<<<

கடலில் தான் அவன் நீந்த முடியும். ஆனால் கடல் அவனில் நீந்துகிறேன் என்கிறது.
அதாவது நீ கடலாக இர்ருந்தாலும் எனக்குள் நீந்துவதே உன் காதல்.

இங்கே ஆணும் பெண்ணும் உயர்வு தாழ்வு இல்லாமல் இணையாக இருக்கிறார்களா?
அவள் இவனுக்கு வேண்டும் என்பது எந்த அளவோ அதே அளவு இவன் அவளுக்கு வேண்டும் என்பது.



>>>உன்னைத் திறக்க வரும்
பூட்டு நான்
என்னைத் திறந்து நிற்கும்
அறை நீ<<<<

இனி அதே போல இதை யோசித்துப் பாருங்களேன்

அன்புடன் புகாரி

சாந்தி said...

விளக்கியபிந்தான் புரிந்தது..

சக்தி said...

அன்பின் புதுக்கவிதைப் புயலே,


>> உன்னைப் பருக வரும்
நதி நான்
என்னில் நீந்த வரும்
கடல் நீ >>


எத்தனை அழகான, மெதுமையான, இனிமையான் வரிகள்.

வியப்போடு வாழ்த்துகிறது நெஞ்சம்

அன்புடன்
சக்தி

துபாய் ராஜா said...

நல்லதொரு கவிதை பதிவு.

இனிய நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.

பூங்குழலி said...

அழகு .என்னில் நீந்த வரும் கடல் நீ .../

சீனா said...

ம்ம்ம்ம் - காதல் கவிதைகள் .....

ஆயிஷா said...

ஆசான்

நீ காற்று நான் மரம்
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்....
இந்தப் பாடலின் சாயல் இல்லையா?
எனக்கு ரொம்பப் பிடித்த பாடல்.
அன்புடன் ஆயிஷா