நீ மையிடுவது
உன் விழிகளை அலங்கரிக்க
என்று நான் என்றுமே நினைத்ததில்லை
மையை அலங்கரிக்கவே
என்று மட்டும் நினைத்ததுண்டு

நான் கவிஞனானதால்
உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால்
நான் கவிஞனானேன்

இன்றெல்லாம்
நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லை
உன்னை நினைத்திருப்பதால்
நான் விழித்திருக்கிறேன்

4 comments:

வானம்பாடிகள் said...

/நான் விழித்திருப்பதால்
உன்னை நினைத்திருப்பதில்லை
உன்னை நினைத்திருப்பதால்
நான் விழித்திருக்கிறேன்/

பூவைச் சுற்றும் வண்டு போல்
உங்கள் பதிவைச் சுற்றிச் சுற்றி வருகிறேன்
தேனுக்கு பஞ்சமேயில்லை.

சிவா said...

நான் கவிஞனானதால்
உன்னை வர்ணிக்கவில்லை
உன்னை வர்ணித்ததால்
நான் கவிஞனானேன்
நானும் கூட அப்படி தான் ஆனேன் .. :)
அருமை ஆசான்

புன்னகையரசன் said...

உண்மை உண்மை....

நானும் கூட அப்படிதான்....

விஷ்ணு said...

கவிதை அருமை அன்பின் புகாரி அவர்களே ..

அன்புடன்
விஷ்ணு ..