வலித்தாய்


வலி
உன்னை
வளர்த்தெடுக்கும் தாய்

உன்னை
உனக்கே உரித்துக்காட்டும்
அம்மணம்

தேடாத விழிகளில்
திசைகளெல்லாம்
ஊமைகளாய் மூடிக்கிடக்கும்

வலியே
தேடலின் வல்லமை

உன் உண்மை முகவரியை
எழுதும் முள்

இருட்டை உடைத்து
வெளிச்ச வழி குடையும்
சிற்றுளிகளின் பேரியக்கச் சக்தி

மனிதா
நீ எப்போதும்
எதையும் வென்றதே இல்லை

உன் தோல்விகள்தாம்
ஒன்றுகூடி
வலிகள் பெருக்கி
வெற்றியிடம் உன்னை
அடித்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சேர்க்கின்றன

2 comments:

ஆயிஷா said...

உன் தோல்விகள்தாம்
ஒன்றுகூடி
வலிகள் பெறுக்கி
வெற்றியிடம் உன்னை
அடித்து இழுத்துக்
கொண்டுபோய்ச் சேர்க்கிறதுநிஜம் ஆசான். அருமையாகச் சொன்னீர்கள். தோல்விகள் தான் எம்மைத் தாலாட்டும் தொட்டில்களும், வெற்றியின் முதற்படிகளும் இல்லையா???????
அன்புடன் ஆயிஷா

பூங்குழலி said...

மனிதா
நீ எப்போதும்
எதையும் வென்றதே இல்லை

அருமையோ அருமை