ஒரு பொட்டு நெருப்பு
உயிருக்குத் தள்ளாடிக்கொண்டு
உள்ளே ஒளிந்திருந்தாலும் போதும்
ஊதி ஊதி நிற்க
குப்பென்று பற்றிக்கொள்ளும்

கொஞ்சம்
ஞாபகச் சருகுகளை
உணவாய்க் கொடுத்தால்
இன்னும் வீறிட்டு எழுந்து
வான்தொட எரியும்

கழிவு நீரில்
ஊறிக்கிடக்கும் கரித்துண்டிடம்
நுரையீரலையே
விற்றுக்கொண்டு நின்றாலும்
உயிர்தான் வீங்கி வெடிக்கும்

1 comment:

வானம்பாடிகள் said...

/கழிவு நீரில்
ஊறிக்கிடக்கும் கரித்துண்டிடம்
நுரையீரலையே
விற்றுக்கொண்டு நின்றாலும்
உயிர்தான் வீங்கி வெடிக்கும்/

அம்மாடியோ. என்ன கற்பனை!