தூரத்து நிலாக்கள்
தாஜ்மகாலின்
சலவைக்கல் மடிகளைப்போல
நிச்சலனக் குட்டையின்
மேலாடைபோல

பாதப்பூ மலர்ந்த கணத்தில்
இடறிய கற்களின் நிழலுருக்கள்கூட
ஆர்வக் கண்களின்
நிரந்தர அடைக்கலனில்

இன்றோ
நெஞ்சச் சுடுகாட்டில்
ரண ஓலங்கள்
தழும்புச் சமாதிகளின்
அவசரப் பிரசவங்கள்

2 comments:

வானம்பாடிகள் said...

/இன்றோ
நெஞ்சச் சுடுகாட்டில்
ரண ஓலங்கள்
தழும்புச் சமாதிகளின்
அவசரப் பிரசவங்கள்/

பாராட்டுகள் வார்த்தைச் சித்தரே:)

அன்புடன் புகாரி said...

வானம்பாடிகள் என் வலைப்பூவில் தேனருந்துவது மகிழ்வினைத் தருகிறது, நன்றி