பாரமாய் கனத்து நொடியில் எடையிழந்து
தரைபாவாமல் தவிக்கும் உடல்

சிறகடித்துச் சிறகடித்து தனக்குள்ளேயே
அடைபட்டுத் தவிக்கும் மனம்

படு வேகமாய்த் துடிக்கத் தொடங்கி
சட்டென்று நின்றுபோய்
தவியாய்த் தவிக்கும் உயிர்

இந்த உலகத்திலேயே
முதன்மையான தவிப்பு
காதலியைச் சந்திக்கப் போகிறோம்
என்ற தவிப்புதான்

3 comments:

சாந்தி said...

அருமை.. காதலி மட்டுமல்ல துணையையும்.. மணவரையில் முதன்முதலில் சந்திக்கும்போது இதே தவிப்புதானே/

சீனா said...

தவிப்பிலே சிறந்த தவிப்பு எது
காதலை - காதலியைச் சந்திக்க தவிக்கும் தவிப்பு தான்

பூங்குழலி said...

ரொம்ப ரொம்ப அருமையாக இருக்கிறது ...