கண்ணீரைக்
கண்ணீரால் சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால் தூக்கிவிட்டு
நீ என்னை நானாக்கியபோது
என் சிறகுகளின் சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்

பின்னொரு நாளில்
ஒரு பெரிய பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும் கலையை
நானே அறிந்திருப்பது
அவசியமென்று அறிந்துகொண்டேன்

2 comments:

Anonymous said...

ஆசான்... இதை நான் படிக்கும் போது... படிக்கும் போது.. படிக்கும் போது... ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்... நானும் சாவி செய்ய கற்று கொண்டிருக்க வேணும்.. தப்பு செய்து விட்டேன்

Anonymous said...

பெரும்பாலும் சாவியைத் தொலைத்து விட்டுத் தேடும் உண்மையை அழகாக உணர்த்தியிருக்கிறீர்கள் திரு.புகாரி.
த.பிரபு குமரன்