இனி நாம்
சந்திக்கக் கூடாது என்று
நீதானே சொன்னாய்
பிறகு ஏன் ஒரு நாளும் விடாமல்
நீ என் கனவில் வந்து தொலைக்கிறாய்

நான் உறங்கச் செல்லும்போது
நீ என் தலையணைக்குள்
ஒளிந்திருப்பாயா
அல்லது
எப்போதுமே நீ என்
இமைகளின் மேல் மாடியில்தான்
குடியிருக்கிறாயா

இப்படித்தான்
சில காலம் வருவாய்
பின் ஒருநாள் என்னை அழைத்து
இறுக்கமாகக் கட்டிக்கொண்டு
கனவில்கூட இனி நாம் சந்திக்கக்கூடாது
என்று சொல்லிவிட்டு
என் முகத்தை ஏக்கத்தோடு
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே
போயே போய்விடுவாய்

Comments

சிவா said…
இனி நாம்
சந்திக்கக் கூடாது என்று
நீதானே சொன்னாய்
பிறகு ஏன் ஒரு நாளும் விடாமல்
நீ என் கனவில் வந்து தொலைக்கிறாய்

அதானே !! :)

நான் உறங்கச் செல்லும்போது
நீ என் தலையணைக்குள்
ஒளிந்திருப்பாயா
அல்லது
எப்போதுமே நீ என்
இமைகளின் மேல் மாடியில்தான்
குடியிருக்கிறாயா

இருக்கலாமோ!!!

இப்படித்தான்
சில காலம் வருவாய்
பின் ஒருநாள் என்னை அழைத்து
இறுக்கமாகக் கட்டிக்கொண்டு
கனவில்கூட இனி நாம் சந்திக்கக்கூடாது
என்று சொல்லிவிட்டு
என் முகத்தை ஏக்கத்தோடு
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே

போயே போய்விடுவாய்
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் .. (பெருமூச்சு தான்)
பிரசாத் said…
பூத உடல் வாழ்வின் காதலில் தான் பிரிவும் ஏக்கமும். உள்ளத்தால் ஒருவருடன்
ஒருவர் வாழ ஆரம்பித்த பிறகு காதலில் பிரிவும் ஏக்கமும் எங்கே. ஒருவரை
நேசிக்கும் உள்ளமானது சூழ்நிலையின் காரணமாக தன்னைக் காண வேண்டாம் என
உதட்டளவில் கூறலாம். உள்ளத்தால் காண வேண்டாமென்றொ, பேச வேண்டாமென்றோ
சொல்ல அல்ல நினைக்க கூட எத்தனிக்காது எனக்கு தெரிந்த வரை....
சீனா said…
அன்பின் புகாரி

என்ன ஆயிற்று - காதலினைப் பற்றி இத்தனை கவிதைகள் - அதிலும் தோல்வி - சோகம் - மரணம் எனப் பல கவிதைகள்

கவிதை ரசிக்கத்தக்க கவிதை - நடை வழக்கம் போல் அருமை

தலையணை - கண்ணின் இமை - இவைகளில் இல்லை - அவள் ( அவராகவும் இருக்கலாம் ) - இருக்கும் இடம் மறக்க மறுக்கும் மன்ம்தான். நாம் மறக்க இயலாமல் கனவு கண்டு விட்டு அவளை(ரை)க் குறை சொல்லி என்ன பயன்.

ஒரு நாள் பிரிவதற்கு இருவரும் காரணமாக இருக்கலாமே

ஏன் ஒருவரை மட்டும் குறை சொல்ல வேண்டும்
பூங்குழலி said…
நீ என் தலையணைக்குள்
ஒளிந்திருப்பாயா
அல்லது
எப்போதுமே நீ என்
இமைகளின் மேல் மாடியில்தான்
குடியிருக்கிறாயா

நல்லா இருக்கு ....
விஷ்ணு said…
அருமை ஆசானே
காதல்.... காதல் ... நினைவுகளே ..அருமை ..அருமை ..

அன்புடன்
விஷ்ணு ..

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ