என்னை வாழவிடு
உனக்குள்ளேயே துடித்துக்கிடக்கிறேன்
என்னைச் சாகவிடு
உனக்குள்ளேயே புதைந்து விடுகிறேன்

கட்டுகள் கோடுகள் கூண்டுகள் என்று
வாழ்க்கைக்கு மரணத்தோடு கயிறிழுப்பா

என்னோடு நீயிருந்தால்
எதையும் வெல்வோம்
என்னை நீ பிரிந்தால்
மூச்சுவிடவும் தோற்போம்

நம் முட்டைகளில்
பொரிக்கபடாத குஞ்சுகளாய்
நம் கனவுகளும் துடிப்புகளும்
வா அடைகாக்கலாம்

Comments

வாழ்ந்தாலும் உன்னுள்ளே வாழ்வேன் - செத்தாலும் உன்னுள்ளே புதைவேன்

உடனிருந்தால் வாழ்க்கையில் வெற்றி
இல்லையேல் சாவுதான்

நம் கனவுகளையும் துடிப்புகளையும் சேர்ந்தே பொரிப்போம் வா

காதல் காதல் காதல் - புகாரியின் காதல்

நல்வாழ்த்துகள் புகாரி
புன்னகையரசன் said…
என்னை வாழவிடு
உனக்குள்ளேயே துடித்துக்கிடக்கிறேன்


இதயமாகவா....என்னைச் சாகவிடு
உனக்குள்ளேயே புதைந்து விடுகிறேன்

நினைவுகளாகவா....


கட்டுகள் கோடுகள் கூண்டுகள் என்று
வாழ்க்கைக்கு மரணத்தோடு கயிறிழுப்பா

என்னோடு நீயிருந்தால்
எதையும் வெல்வோம்
என்னை நீ பிரிந்தால்
மூச்சுவிடவும் தோற்போம்


ஒரு வரியில் இருவரின் வலி... உணர்வுகள்...


நம் முட்டைகளில்
பொரிக்கபடாத குஞ்சுகளாய்
நம் கனவுகளும் துடிப்புகளும்
வா அடைகாக்கலாம்


வாரே வா..... அழைப்பது முக்கியமில்லை... அழைக்கும் விதம்....

Popular posts from this blog

பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

சென்னை விழா நன்றியுரை

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ

உடல் எடையைக் குறைக்க உருப்படியான வழிகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

கள்ளக்காதல் - கள்ளக்கனியே அள்ளச்சுவையே