நீ பேசப்பேச
பிரபஞ்சம் என்னிடம்
பிச்சை கேட்டு நிற்கிறது

உன் உணர்வுகளின் பொழிவுகளால்
தொப்பல் தொப்பலாய் நனைந்துவிட்டேன்

இப்படி மப்பும் மந்தாரமுமாய்
நிற்பதும் பொழிவதுமாய் இருந்தால்
எப்போதடீ நான்
தலை துவட்டிக்கொள்வது

5 comments:

சக்தி said...

அன்பின் நண்பரே புகாரி,

இப்படியும் ஒரு மழை இதயத்துள் பொழிதவாதல் தான் புதுக்கவிதைகள்
வெள்ளமாய்ப் பெருகின்றன.


>> உன் உணர்வுகளின் பொழிவுகளால்
தொப்பல் தொப்பலாய் நனைந்துவிட்டேன் >>


வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

சாந்தி said...

வாசிக்கிற எம்மை ஒரு வழி பண்ணாம விடமாட்டீங்க போல...:)

அனைத்தையும் குழந்தைக்கு ஒப்பீடு செய்கிறேன்..




--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.

பூங்குழலி said...

>>>இப்படி மப்பும் மந்தாரமுமாய்
நிற்பதும் பொழிவதுமாய் இருந்தால்
எப்போதடீ நான்
தலை துவட்டிக்கொள்வது<<<<

இப்படி இருந்தால் தலை துவட்டத் தோன்றுமா ?என்ன சொல்வதென்றே தெரியவில்லை இந்தக் கவிதைக்கு ....

புன்னகையரசன் said...

நனைந்தது நீங்கள் மட்டுமல்ல ஆசான்... நானும்தான்...

எனக்குள் நினைவுகளை உள்ளது நிறைய உங்கள் கவிகளில் காண்கின்றேன்...

மயூ மனோ (Mayoo Mano) said...

"எப்போதாவது மீண்டும் வாசிக்கும் போது மனதில் அகலாமல் இருக்கிறதோ அந்தக் கவிதையே சிறந்த கவிதை". அருமையான கவிதைகள். அதில் சிறந்ததொன்று. :)