திருக்குறளும் காதலும்
ஒன்றெனவே அமைத்திருப்பது
ஓர் உபரி ஆச்சரியம்
குறளின் முதலடி உயரம்
அடுத்த அடி குள்ளம்
காதலில் கமழும் ஓர் ஆணையும்
பெண்ணையும் போல
ஆணடியில்தான்
குறள் துவங்குகிறதென்றாலும்
பொருளும் முடிவும்
பெண்ணடியில்தானே
அர்த்தமாகி நிறைகிறது
வாழும் நம் வாழ்வைப்போல
ஆணும் பெண்ணும்
சமமென்றே அறிவிக்கும்
குறளும் காதலும் வாழ்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
ஒன்றெனவே அமைத்திருப்பது
ஓர் உபரி ஆச்சரியம்
குறளின் முதலடி உயரம்
அடுத்த அடி குள்ளம்
காதலில் கமழும் ஓர் ஆணையும்
பெண்ணையும் போல
ஆணடியில்தான்
குறள் துவங்குகிறதென்றாலும்
பொருளும் முடிவும்
பெண்ணடியில்தானே
அர்த்தமாகி நிறைகிறது
வாழும் நம் வாழ்வைப்போல
ஆணும் பெண்ணும்
சமமென்றே அறிவிக்கும்
குறளும் காதலும் வாழ்க
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
1 comment:
அன்பின் புகாரி,
குறுகத்தரித்த குறளில் இல்லாதது இல்லை. இருப்பினும் அதைக் காதலுக்கு ஒப்பிடுவது உயர்வே. குறளெனில் ஈரடி - ஈரடி எனில் இணை. இணைஎனைல் காதல். ஆகவே குறளெனில் காதல் தானே
அன்புடன் ..... சீனா
Post a Comment