பாலைச் செவிக் குகைக்குள்
பசுஞ்சொர்க்கம் வளர்
தாகக் கண்ணிமைக்குள்
தங்க நிறம் தெளி
தூரும் தோல் துளையுள்
இளந்தளிர் நடு
உறையும் குருதி நதியைக்
குப்புறக் கவிழ்
உடைந்த நகநுனியிலும்
துடிப்பிதயம் நிறுத்து
உதிரும் செத்த முடியிலும்
உர உயிர் ஊட்டு
பேசு... பேசு...
பேசுடா செல்லம்
பசுஞ்சொர்க்கம் வளர்
தாகக் கண்ணிமைக்குள்
தங்க நிறம் தெளி
தூரும் தோல் துளையுள்
இளந்தளிர் நடு
உறையும் குருதி நதியைக்
குப்புறக் கவிழ்
உடைந்த நகநுனியிலும்
துடிப்பிதயம் நிறுத்து
உதிரும் செத்த முடியிலும்
உர உயிர் ஊட்டு
பேசு... பேசு...
பேசுடா செல்லம்
5 comments:
பேசினால் ஏற்படும் விளைவுகள் தான் எத்தனை! கவிஞரே வாழ்த்த வரியில்லை.
அன்புடன் ஆயிஷா
நானும் இதைத்தான் கேட்கிறேன் ஆசான்....
ஆனால் மெளனமே பாசையா இருக்காங்க... அழகா இருக்கு ஆசான்..
அன்பின் புகாரி,
கவிதைகளின் தரத்தை பாராட்டும் வகையில் வார்த்தைகள் இன்றித் தவிக்கிறேன்
நண்பரே
அன்புடன்
சக்தி
கலக்கல் கவிதை
எப்படி ஐயா, இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறது!
வாழ்த்துக்கள் நண்பரே...
அன்புடன் என் சுரேஷ்
Post a Comment