என் நெருப்பு
உன் விழிகளில் எரிகிறது
என் நீர்
உன் ரத்தத்தில் பாய்கிறது
என் காற்று
உன் நுரையீரலில் நிறைகிறது
என் மண்
உன்னை தாங்குகிறது
என் ஆகாயம்
உன்னை விழுங்கிக்கொள்கிறது

நீ நானாய் ஆனாய்
நான் உன்னை
என் கண்ணீருக்குள் வைத்துக்கொள்கிறேன்

என் அழுகைகள்
உன்மீதான என் பிரியத்தை
உறுதிசெய்துகொண்டே இருக்கின்றன
என் ஏக்கங்கள்
உன்னுடனான நெருக்கத்தை
இறுக்கிக்கொண்டே இருக்கின்றன
என் காதல்
உன்னை விழுங்கிக்கொண்டு
என்னை நீயாக காட்டிக்கொண்டிருக்கிறது

10 comments:

சா. கி. நடராஜன் said...

நீ நானாய்
நான் நீயானேன்
அன்புடன் புஹாரி
என்று ? நாமாவோம் :))

அருமையானக் கவிதைக்கு வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.

சாந்தி said...

நீ நானாய் ஆனாய்

நான் உன்னை
என் கண்ணீருக்குள் வைத்துக்கொள்கிறேன்

என் அழுகைகள்
உன்மீதான என் பிரியத்தை
உறுதிசெய்துகொண்டே இருக்கின்றன

அருமையான வரிகள்..

வாணி said...

இந்தக் கவிதை அருமை புகாரி...முன்னாடி எழுதியது தானே?


இந்த வரிகள் ரொம்பப் பிடிச்சிருக்கு...

///என் நெருப்பு

உன் விழிகளில் எரிகிறது
என் மண்
உன்னை தாங்குகிறது

என் ஆகாயம்
உன்னை விழுங்கிக்கொள்கிறது///


காதலில் கற்பனைக்கு அளவே இல்லையா?? :)))



அன்புடன்...
வாணி

பூங்குழலி said...

என் காதல்
உன்னை விழுங்கிக்கொண்டு
என்னை நீயாக காட்டிக்கொண்டிருக்கிறது

அருமையான வரிகள்

சீனா said...

அருமை அருமை கவிதை அருமை

இயற்கையின் ஐம்பெரும் பூதங்களை வைத்து ஒரு கவிதை - அதுவும் காதல் கவிதை

நன்று நன்று நண்ப புகாரி

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

சீனா said...

அருமை அருமை கவிதை அருமை

இயற்கையின் ஐம்பெரும் பூதங்களை வைத்து ஒரு கவிதை - அதுவும் காதல் கவிதை

நன்று நன்று நண்ப புகாரி

நல்வாழ்த்துகள்

நட்புடன் ..... சீனா

காந்தி said...

நான் உன்னை
என் கண்ணீருக்குள் வைத்துக்கொள்கிறேன்

மீண்டும் மீண்டும் படிக்கிறேன் இந்த வரிகளை புகாரி

ருத்ரா இ. பரமசிவன் said...

அன்புள்ள புகாரி அவர்களுக்கு

ஐம்புலன்கள் வழியேயும்
கொட்டுகின்ற‌
அந்த "ஐந்தருவி" காதலுக்கு
வழிகாட்டும் அருமையான வரிகள்
உங்கள் கவிதை.
அந்த வார்த்தைச்சிதறல்களின்
ஒவ்வொரு துளியிலும்
உங்க‌ள் எழுத்தின் சூரிய‌ன்
ஏழுவ‌ர்ண‌ ர‌த்த‌ம் துடிக்கும்
அற்புத‌க்காத‌லின்
அருமையான‌ வான‌வில்லை
வ‌ளைத்துக்காட்டியிருக்கிறீர்க‌ள்.
பாராட்டுக‌ள்.

அன்புட‌ன் ருத்ரா
===================================

சிவா said...

அருமையான கவிதை ஆசான்

சீனா said...

கவிதை வழக்கம் போல அருமை புகாரி

சிவா நலமாகவும் - மகிழ்ச்சியாகவும் இருப்பது குறித்து மெத்த மகிழ்ச்சி


நட்புடன் ..... சீனா
--------------------------------