உங்களை
உயிருக்குயிராய்
காதலிக்கிறேன்
என்னை
மறந்துவிடுங்கள்

6 comments:

சீதாம்மா said...

பெண்

சாந்தி said...

> உங்களை
> உயிருக்குயிராய்
> காதலிக்கிறேன்
> என்னை
> மறந்துவிடுங்கள்
> அன்புடன் புகாரி



எப்படி இப்படி மிக சரியாக நான் எழுதியதே ...

இதுவன்றோ மிக புனிதம்..?

சிலருக்கே புரியும் இப்படி ஒன்று இருக்கா என..?

நான் முதலில் எழுதிய கவிதை மாதிரி..


நடிப்பு
======

உன்னை நான் வெறுப்பதுபோல் நடிக்கிறேன்.
என்னை நீ அப்படியாவது வெறுக்க வேண்டும்.

வெறுத்து நல்ல கவி படைப்பாய்,
காதல் மறந்து அறிவை பெருக்குவாய்,
கனவினின்று விழித்தெழுவாய்.,
நிழலிலிருந்து நிஜமுணர்வாய்.,
நீ வாழ்ந்து பிறரை வாழ வைப்பாய்.

என்னுள் இன்னும் காதல் இருந்தாலும்,
நீ வாழ்க்கையை காதலிக்கும் வரை ,
என் வாழ்வில் இந்த காதலை ,
நடிப்பேன் வெறுப்பது போல்..

என்னால் உன்னை ஒரு குழந்தை போல் ஆக்கி,
என்பின்னால் ஓடி வர செய்ய முடியும்.
அதுவா காதல்?, வேண்டாம் எனக்கு அது !

உன்னை ஒரு வீரனாக்கி உன்
பின்னால் உலகம் ஓடி வரச்செய்வேன்.
அதுதான் என் காதலின் வெற்றி.

அப்போது நீ சொல்வாய், என் வெற்றிக்குப் பின்னால்
ஒரு பெண்ணின் வெறுப்பு இருந்தது என்று.
சிரித்துக் கொள்வேன், இல்லையடா, அதுஎன் காதல் என்று.

சிலருக்கு காதல் வெறும் நடிப்பு, விளையாட்டு,
எனக்கோ உன்னிடம் நடிப்பதே காதல்.

புரிந்து கொள்ள வேண்டாம் நீ,
புரிந்தால் தோற்று விடுவோம் நாம்!

இந்த சுகமான வலி மட்டும் போதும்,
என் நடிப்புக்கு பரிசாக........



--
சாந்தி
தன்னைப்போல் பிறரையும் நேசி..

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

துரை said...

ஆசானே

இது தான்
காதலில் தோற்று
காதல் செயிக்கும்
அதிசயத்தின்
ரகசியமா ? :)

விஷ்ணு said...

உண்மை காதல்
பல நேரங்களில் இப்படித் தான்
கட்டாயத்தின் பேரில்
வர்ணம் பூசிக்கொள்கிறது ..

அருமையான வரிகள் அன்பின் புகாரி ...

விஷ்ணு ...

சீனா said...

அன்பின் புகாரி


கவிதை அருமை - கற்பனை சிறப்பு

காதலி / காதலன் - உயிருக்குயிராய் நேசித்தும் மறக்க வேண்டிய சூழ்நிலை

எனன் செய்வது - காலத்தின் கட்டாயம் -

நட்புடன் ..... சீனா
------------------------------