உன் கூந்தலில்
எனக்கான காதல் வாசனையை
யார் பின்னிப்போனது

உன் கையணைவுகளில் ரோஜா சாற்றை
யார் கொட்டிவைத்தது

உன் மார்பினில் ஊட்டி மலர்களை
யார் பரப்பிச்சென்றது

என் ஆடைகளில் வாசனை திரவியமாய்
உன் வியர்வையை ஒத்திக்கொள்ள
யார் சொல்லித்தந்தது

7 comments:

முத்து சிவகுமரன் said...

இதைப் படித்தவுடன் “முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா” என்ற வைரமுத்ஹுவின் பாடல் நினைவுக்கு வந்தாலும் ரசிக்கக்கூடியதாகவே இருந்தது

Unknown said...

நன்றி முத்து,

முத்தம் மூன்றாம் உலகப்போரல்ல..... அதுதான் முதல் உயிரினப் போர்!

அன்புடன் புகாரி

ஹரன் ஜாபர் said...

யார் யார் யார் அவள் யாரோ... சும்மா, பாட்டைத்தான் பாடியிருக்கிறேன்.

படிப்படியாகப் போயிருக்கிறீர்கள், கவிதையிலும்;
இருப்பு, அணைப்பு, பிணைப்பு.... பின் நினைப்பு.

கூந்தலின் மணம் பற்றிய ஆராய்ச்சி என்றும் முடிவதாய் இல்லை.
மணம் உள்ளதால் மனம் பற்றியதா? இல்லை
மனம் உள்ளதால் மணம் பற்றியதா?

வெப்பம் கூட்டும் வேளையிலும்
ஊட்டியை உணர்த்தும் காதல் !

வாழ்க.

அன்புடன்
ஹரன்.

சக்தி said...

அன்பின் நண்பர் புகாரி,

கற்பனை, தமிழ், கவிவளம் அனைத்தும் கூட்டி நீங்கள் ஆக்கிய இந்தக் கவிதைச்
சமையலின் சுவை, அப்பப்பா ! நெஞ்சை இன்பச் சுவையினில் அல்லாட வைத்து
வைத்து விடுகிறது.


>>> என் ஆடைகளில் வாசனை திரவியமாய்
உன் வியர்வையை ஒத்திக்கொள்ள
யார் சொல்லித்தந்தது >>

அன்புடன்

சக்தி

சிவகுமார் said...

இந்த வரிகள் , இந்த கண்கள் இந்த வரிகளின் அர்த்தங்கள் மனதை மயக்குகின்றன.
நன்றி !!!
போநிஒ

விஷ்ணு said...

அருமை அருமை ..கவிதை அருமை .. புகாரி .. அவர்களே ..

காதல் ரசத்தை கொட்டி விட்டீர்களே ..கவிதையாக ..


விஷ்ணு ...

தஞ்சை மீரான் said...

நல்ல ரொமான்ஸ் கவிதை :-)