நாவடியில் வைத்து என்னை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் தத்தளிக்கிறாய்

குறுதி கொப்பளிக்கும் என் உயிர்
உன் அவதிகள் கண்டு செத்து மடிகிறது

சோதனையாய் ஒன்றுசெய்
என்மீது கண்ணீர் பொழியும்
உன் விழிகளை இக்கணமே தடுத்து நிறுத்திக்கொள்

பின்னெல்லாம் உன்முன்
வசந்தங்கள் திறந்துகொண்டால்
என்னை முழுவதும் மறந்து வெகுதூரம் ஓடிப்போ

அன்றி
உன்னிடம் இருப்பவையும்
தொடு தூரத்தில் தழுவக் காத்திருப்பவையும்
மூடிக்கொண்டுவிட்டால்
வா வா என் உயிரே நீ என்னிடமே வந்துவிடு

4 comments:

சாந்தி said...

பின்னெல்லாம் உன்முன்
வசந்தங்கள் திறந்துகொண்டால்
என்னை முழுவதும் மறந்து வெகுதூரம் ஓடிப்போ

அன்றி
உன்னிடம் இருப்பவையும்
தொடு தூரத்தில் தழுவக் காத்திருப்பவையும்
மூடிக்கொண்டுவிட்டால்
வா வா என் உயிரே நீ என்னிடமே வந்துவிடு


ரசித்த வரிகள்.. தோல்வியில் தோள் கொடுக்கும் பாங்கு..

சீனா said...

அருமை அருமை புகாரி

நாவைட்யில் வைத்தால் துப்பவோ விழுங்கவோ முடியாது - நல்ல கற்ப்னை - சிந்தனை

நல்வாழ்த்துகள் நண்ப புகாரி

பூங்குழலி said...

>>>நாவடியில் வைத்து என்னை
விழுங்கவும் முடியாமல்
துப்பவும் முடியாமல் தவிக்கிறாய் <<<


அழகு இந்த வர்ணனை ..ஆனால் சில நேரங்களில் துப்பாமலும் விழுங்காமலும் நாவுக்கடியில் வைத்து சுவைப்பதும் ஒரு வகை இன்பம் தானே

புன்னகையரசன் said...

நான் சாந்தி அக்கா கட்சி...

உலகத்தின் கடைசிக்கு தள்ளப்பட்டு விட்டாயா...
திரும்பிப் பார்... உன் நிழலோடு நானும்....