நீ
பிறந்தபோது நானறியேன்
என் உயிரைத் தத்தெடுத்துக்கொள்ளவே
நீ பிறந்திருக்கிறாயென்று

நீ
வளர்ந்தபோது நானறியேன்
என்னைப்போலவே ஏக்க விழிகளோடு
நீயும் வளர்கிறாயென்று

நீ
கண்ணீராய் உன் கன்னங்களிலும்
என் உயிரிலும்
உருண்டபோதுதான் தெளிந்தேன்
நீயில்லாமல் இனி நானில்லையென்று

என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்

3 comments:

சாந்தி said...

கவிதை வரிகள் நன்று..

ஆனால் காதலுக்காக மட்டுமே உருகி உயிர் துறப்பது ஏற்க முடிவதில்லை..


--
சாந்தி
கற்றது கைமண் அளவு. கல்லாதது கூகுள் அளவு.
http://punnagaithesam.blogspot.com

பூங்குழலி said...

நீ
கண்ணீராய் உன் கன்னங்களிலும்
என் உயிரிலும்
உருண்டபோதுதான் தெளிந்தேன்
நீயில்லாமல் இனி நானில்லையென்று

நல்லா இருக்கு இந்த வரிகள்

புன்னகையரசன் said...

உங்க காதல் இருவர் கருவரையில் இருந்து தொடங்கி இருக்கிறது போல...


என் உயிர்
உனக்காக ஊதுபத்தியாய்ப் புகைகிறது
அது உதிர்க்கும் சாம்பலையாவது
உன் கைகளில் ஏந்திக்கொள்
நான் மரணத்திலும் வாழ்வேன்


அது ஏன் கடைசியில் சோகம்.. எப்போதும் காதலிகள் சந்தோசம் தருவதில்லையா...