மடியில் கிடந்த நித்திரை
விழித்தெழுந்து ஓடிவிட்டது

உயிரில் விழுந்த கண்ணீர்
சாக்கடல் பரிசளித்து ஆவியானது

என் உயிர் ஒரு முறை உள்ளிழுத்த
உயிர்க் காற்றை
ஒரு நாளும் மறப்பதில்லை

தவமிருக்கிறேன்
உயிர் உடைந்து சொட்டுச் சொட்டாய்க்
கொட்டக் கொட்ட

காதலிக்கிறேன் உன்னை எப்போதும்

Comments

பூங்குழலி said…
நிலாவும் நீயும் எனக்கு ஒன்றுதான்
அதுவும் தொலைவில் நீயும் தொலைவில்
அதுவும் என் விழிகளில் நீயும் என் விழிகளில்
அதுவும் வெள்ளையாய்
உன் உள்ளமும் தேங்காய்ப்பூ வெள்ளையாய்

அழகாய் இந்த வர்ணனைகள்

ஆனால் ஒரு வித்தியாசம்
நிலாவை நான் ரசிக்கிறேன்
உன்மீதோ
பைத்தியத்திலும்
கேடுகெட்ட பைத்தியமாய் இருக்கிறேன்

நிலா வராவிட்டால்
நான் வருத்தத்தோடு உறங்கிவிடுவேன்
நீ வராவிட்டால் நான் செத்தே போய்விடுவேன்
ஆம் நிலா என் ரசனைதான்
நீயோ என் வாழ்க்கை

உன்னை தூரத்தில் வைத்து
விழிகளால் வருடிக்கொண்டிருந்தாலும் போதும்
வாழ்க்கை வசந்தமாய்ப் பூரித்துக்கொள்ளும்

எனவேதான் தவமிருக்கிறேன்
உயிர் உடைந்து சொட்டுச் சொட்டாய்க்
கொட்டக் கொட்ட
அருமை
ஆயிஷா said…
உன்னை தூரத்தில் வைத்து
விழிகளால் வருடிக்கொண்டிருந்தாலும் போதும்
வாழ்க்கை வசந்தமாய்ப் பூரித்துக்கொள்ளும்

மனதைத் தொட்ட வரிகள்.
அன்புடன் ஆயிஷா
சாந்தி said…
விழிகளால் வருடிக்கொண்டிருந்தாலும் போதும்
வாழ்க்கை வசந்தமாய்ப் பூரித்துக்கொள்ளும்


வரிகள் அருமை.
பிரசாத் said…
உருகி உருகி காதலித்து பயனென்ன
உன் துணை காதலை உணராத வரை...

Popular posts from this blog

அன்புடன் உங்களை அன்புடன் வரவேற்கிறது

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சென்னை விழா நன்றியுரை

மகளின் பிறந்தநாள் வாழ்த்து

காணி நிலம் வேண்டும் பராசக்தி

கண்ணீர் வரிகள் இதய வரிகளை மறைக்கின்றன

Ilayaraja Toronto 16 Feb 2013 (Part 1) - இளையராஜா டொராண்டோ