கடைக் கண்ணையும் மடித்து
கைப்பையில் இட்டுக்கொண்டு
கவனமாய்க் கடந்தாய் என்னை நீ நேற்று
உலையரிசியை வெளித்தள்ளி
உள்ளே விழுந்து கொதித்ததென் உயிர்
இன்றோ
மூன்றாம்பிறை இமைகளுதிர
முழுமொத்த விழி விரித்து
மோகமாய் விழுங்குகின்றாய் நின்று
ஓநாய்க்குத் தப்பியோடும்
சிறு முயலின் மூச்சிறைப்பில்
என் உயிர் கிடந்து தவியாய்த் தவிக்கிறது
இனி எப்போதுதானடி
நானென் இயல்பிலிருப்பேன்
4 comments:
/மூன்றாம்பிறை இமைகளுதிர
முழுமொத்த விழி விரித்து
மோகமாய் விழுங்குகின்றாய் நின்று/
ஆஹா.
/இனி எப்போதுதானடி
நானென் இயல்பிலிருப்பேன்/
வாவ்.
=)) top..!
கஷ்டம் தான் என்ன பண்றது... :)
இது கவிதை அல்ல, உங்கள் காதல் நெஞ்சத்தின் அசரீரி.. அருமை நண்பரே... படித்ததும் நான் என் இயல்பிலில்லை... இன்னும் கூட எதிரொலித்துக் கொண்டே....
Post a Comment