முகிலின் துப்பட்டாவுக்குள்
முத்தமிட்டேன் நனைந்தேன்
நான் சூரியனாய்ச் சூடானேன்
என் உயிருக்குள் கருவானேன்

நேற்று வரை நானும் ஒரு கூழாங்கல்
இன்று முதல் யோகங்களின் வைரக்கல்
என்னைவிட்டுப் போகாதே
உயிரின் கரு கலைவது கூடாதே

நெருப்புக்குள் விழுந்து நான் நனைகிறேன்
நீருக்குள் நின்று நான் எரிகிறேன்
வானத்தின் வரப்புகளில் நடக்கிறேன்
பூமிப்பந்தின் உள்ளுக்குள் பறக்கிறேன்

கண்டு கொண்டேன்
உன்னை நான் நேசிக்கின்றேன்
கண்கள் போகும் பாதை எல்லாம்
நீயே கண்டேன்

காற்றுக்குள்
என் சுவாசத்தைக் காணவில்லை
கண்மணியே உன் காதல் இன்றி
மூச்சே இல்லை

8 comments:

வாணி said...

வாவ்வ்...இந்த கவிதை சூப்பர் புகாரி ...
மெட்டுகட்டி பாட்டா பாடிடலாம் போல இருக்கு...:)

ஏதாவது மெட்டுக்கு கவிதை எழுதியதா?

///நெருப்புக்குள் விழுந்து நான் நனைகிறேன்

நீருக்குள் நின்று நான் எரிகிறேன்
வானத்தின் வரப்புகளில் நடக்கிறேன்

பூமிப்பந்தின் உள்ளுக்குள் பறக்கிறேன்/// -----அழகிய வரிகள்

அன்புடன்...
வாணி

பூங்குழலி said...

காற்றுக்குள்
என் சுவாசத்தைக் காணவில்லை

அருமை

பூங்குழலி said...

காற்றுக்குள்
என் சுவாசத்தைக் காணவில்லை

அருமை

சிவா said...

நெருப்புக்குள் விழுந்து நான் நனைகிறேன்
நீருக்குள் நின்று நான் எரிகிறேன்
வானத்தின் வரப்புகளில் நடக்கிறேன்
பூமிப்பந்தின் உள்ளுக்குள் பறக்கிறேன்


அருமை ஆசான்... காதல்ல இதெல்லாம் சாதரணமப்பா :)

புன்னகையரசன் said...

அருமை ஆசான்.... அருமை ஆசான்...

துரை said...

துப்பட்டாவிற்குள் நான்
தொட்டபெட்டா உணர்ந்தேன்

பிரசாத் said...

காற்றுக்குள்
என் சுவாசத்தைக் காணவில்லை
கண்மணியே உன் காதல் இன்றி
மூச்சே இல்லை


இது மட்டுமே ஒரு சிறு கவிதை போல் உள்ளது நண்பரே...

காதலில் இன்னுமொரு மைல்கல் இது...

Vijay said...

//காற்றுக்குள்
என் சுவாசத்தைக் காணவில்லை
கண்மணியே உன் காதல் இன்றி
மூச்சே இல்லை//

தங்களின் வரிகள் ஒவ்வொன்றும் காதலின் புனிதத்தை மட்டுமல்ல அதன் ஆழத்தையும் உணர்த்துகின்றது
வாழ்த்துக்கள்