கருங்கூந்தல் கற்றைகள்
செவ்வாழைத் தோள்விழுந்து
பொன்மின்னல் இழைகளாய்த் தெறிக்க

உன் தாஜ்மகால் தலை சாய்த்து
இடக்கண் இமைகளை
சந்தனக்காட்டு வண்ணத்துப் பூச்சிகளின்
சாயுங்காலச் சிறகசைப்பாய்
படக்கென ஒரு முறை முத்தமிடச் செய்தாய்

அப்போதே நான் உன் பைத்தியம் என்ற
கண்ணியமான பட்டமளிப்பு விழா
விழித் திரைகள் ஒளிர
இதயச் சங்குகள் முழங்க
நரம்பு நந்தவனம் அதிர
நடந்தேறிவிட்டது

2 comments:

vasu balaji said...

/அப்போதே நான் உன் பைத்தியம் என்ற
கண்ணியமான பட்டமளிப்பு விழா
விழித் திரைகள் ஒளிர
இதயச் சங்குகள் முழங்க
நரம்பு நந்தவனம் அதிர
நடந்தேறிவிட்டது/

அட அட. எப்படிப் பாராட்ட.

சிவா said...

ஹ ஹ ஹ .. என்ன ஆசான் இப்படி சொல்லிடீங்க