பார்வைகளால் கீறிக்கீறி
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்
புன்னகையால் சிறைபிடித்து
காதலைச் சொல்வார்கள் சில பெண்கள்
இப்படியாய்
கடிதங்களால்
கால்விரல் கோலங்களால்
கவிதைகளால்
கவர்ச்சி அபிநயங்களால்
காதலைச் சொல்வார்கள்
உலகெங்கிலும் பெண்கள்
நெகிழ்ந்து நெகிழ்ந்து
ஏங்கங்களைச் சுமந்து சுமந்து
உயிரின் செல்களைக் கரைத்து கரைத்து
கன்னங்களில் உருண்டு பேசும்
விழிமணிகளால்
விழிமணிகளின் உப்புப் பூக்களால்
அன்பை நேசத்தை பரிவை பாசத்தை
கருணையை காதலைச்
சொன்ன நூதனமே
உனக்கு நான் யாரென்று
அறிவதில் அக்கறையில்லை எனக்கு
ஆனால் எனக்கு நீதான்
நீ மட்டும்தான் எல்லாமானவள்
6 comments:
arumai sir..!
அருமை ஆசான்... எல்லாம் அவள்தான்...
ஆனால் புரிந்து கொள்ளத்தான் மாட்டேன் என்கிறாள்...
இப்படியாய்
கடிதங்களால்
கால்விரல் கோலங்களால்
கவிதைகளால்
கவர்ச்சி அபிநயங்களால்
காதலை சொல்வார்கள்
உலகெங்கிலும் பெண்கள்
நெகிழ்ந்து நெகிழ்ந்து
ஏங்கங்களைச் சுமந்து சுமந்து
உயிரின் செல்களைக் கரைத்து கரைத்து
கன்னங்களில் உருண்டு பேசும்
விழிமணிகளால்
விழிமணிகளின் உப்புப் பூக்களால்
அன்பை நேசத்தை பரிவை பாசத்தை
கருணையை காதலை
சொன்ன நூதனமே
அருமை
அருமை அன்பின் புகாரி அவர்களே ..
ஆகா .. மிக மிக அருமை ஆசான் ..
இந்தக் கவிதை நன்றாக வந்திருக்கிறது புகாரி.......
Post a Comment