சிறு மலரின் பொன்னிதழ் மேல்
சிம்மாசனமிற்றிருக்கும்
நிம்மதிப் பனிக்குடம் கவிழ்க்க
துளியும் விருப்பில்லை எனக்கு
உள்ளங்கை மெத்தையில் இட்டு
மூச்சு வெப்பக் கூடுகட்டி
இமைகழித்துக் காவலிருக்கும்
என்னால் அது எப்படி இயலும்
ஆயினும்
விழிகளிலும் நெஞ்சக் குழிகளிலும்
விழுந்து சிதறடித்தப் பேரிடிகள்
போதுமென்று விட்டுவிடவில்லை
இனியும் இன்னமும் கொடூரமாய்
வேர்களுக்குள்ளும்
இறங்கிக்கொண்டேதான் இருக்கின்றன
நீ வந்து முத்தமிடு
உன் எச்சிலால் மருந்திடப்பட்டு
என் காயங்களெல்லாம் உதிர்ந்தழியும் என்று
என் மனமின்னல் உனை நோக்கிப் பாய்கிறது
அன்பே நீ இதழ் குவிப்பாயா
1 comment:
//சிறு மலரின் பொன்னிதழ் மேல்
சிம்மாசனமிற்றிருக்கும்
நிம்மதிப் பனிக்குடம் கவிழ்க்க
துளியும் விருப்பில்லை எனக்கு//
ரோஜாச் செடியின் மீது ஒரு பனித்துளையைக் கண்டு அழகாக இருக்கிறதே என்று கூடத் தோன்றாத இயந்திர மனிதர்களுக்கு நடுவே இப்படி எழுதும் கவிஞனே உன்னை போற்றுகிறேன்.
Post a Comment