பூவைப் பறித்துவிட்டால்
மீண்டும் காம்பில் இட முடியாதுதான்
ஆனால் நெருப்பைப் பறித்துவிட்டால்
மீண்டும் தீபத்தில் இட்டுவிடலாமே

சிசுவைப் பிரித்துவிட்டால்
மீண்டும் கர்ப்பத்தில் சேராதுதான்
ஆனால் நீரைப் பிரித்துவிட்டால்
மீண்டும் சேர்ந்துவிடுமே

முடியைப் பிடுங்கி நட்டால்
அது வளர வழியில்லைதான்
ஆனால் நாற்றைப் பிடுங்கி நட்டால்
இன்னும் செழித்து வளருமே

வெள்ளி விழுந்துவிட்டால்
மீண்டும் வானம் ஏறாதுதான்
ஆனால் சூரியன் விழுந்துவிட்டால்
மீண்டும் விடியலில் வானேறுமே

விதையைக் கிள்ளிவிட்டால்
அது மரமாய் வளராதுதான்
ஆனால் காதலைக் கிள்ளிவிட்டால்
அது மீண்டும் துளிர்த்துவிடுமே

5 comments:

vasu balaji said...

/ஆனால் காதலைக் கிள்ளிவிட்டால்
அது மீண்டும் துளிர்த்துவிடுமே/

:)அழகு!

சீனா said...

அன்பின் புகாரி

கவிதை அருமை

காதல் துளிர்க்கும் உண்மை

நல்வாழ்த்துகள்

பூங்குழலி said...

நெருப்பை தீபத்தில் இடுவது ௦---அருமை

நன்றாக இருக்கிறது புகாரி

சிவா said...

உண்மை ஆசான்

அன்புடன் மலிக்கா said...

நிதர்சனமான உண்மை..