மேகத்திற்கும் சூரியனுக்கும்
வானவில் பிறக்கும் அதிசயம்போல்
மௌனத்தால் மெலிதாய்க் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்
அண்ட வெளிகளில்
பிளக்கப்படா அணுவடர்வாய்
மௌனத்தால் மௌனமாகவே இருப்பாள்
விருப்பில்லாப் பெண்
பெண்ணின் மௌனம்
பிழையில்லாச் சம்மதமென்று
எவன் சொன்னது
சுயநலச் சூட்டில் கொதித்து
பெண்ணை வசதியாய் வளைக்கும்
அபிலாசைச் சொல்லல்லவா அது
புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுளம்
அவகாசம் கேட்கும் மனுக்களாய்த்தான்
சட்டுச்சட்டென மொட்டுகளாகும்
பெண்ணின் பூக்கள்
சரியான சாவி தேடி அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அன்பளித்துக் காத்திருப்பதே
நல்ல ஆண்மை
6 comments:
கருத்துக்கு உடன் படுகிறேன் நண்பரே
கவிதை அருமை அருமை.
பெண்ணின் உள்ளத்தின் ஆழத்தைக் கண்டவர் எவருமிலை. மவுனம் என்பது சம்மதம் என்பது நமக்கு நாமே வகுத்த சால்ஜாப்பு. மவுனமாக வாய் மூடி, இயற்கையான வெட்கத்தினால் பேசாது இருக்கும் பெண்கள் உடல் மொழியால் ( Body Language) ஆயிரம் சம்மதம் தெரிவிப்பார்கள். விருப்பமின்மையையும் தெரிவிக்கலாம். உடல் மொழி தெரிந்தவன் புரிந்து கொள்வான்.
பூக்கள் மொட்டுகளாகும் உவமை அருமை. அவள் அவளை அவளாகவே திறப்பாள். இது நிச்சயம் நடக்கும். பொறுத்திருக்க வேண்டும் அதுவும் அன்புடன் அன்பு செலுத்தி.
நல்ல கருத்துகள். நல் வாழ்த்துகள்.
அன்புடன் ..... சீனா
மேகத்திற்கும் சூரியனுக்கும்
வானவில் பிறக்கும்
அதிசயம்போல்
மௌனத்தால்
மெலிதாய்க் கிசுகிசுப்பாள்
நெகிழ்வான பெண்
புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுளம்
சரியான சாவி தேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அன்பளித்துக் காத்திருப்பதே
நல்ல ஆண்மை
வரிகள் நல்லா இருக்குங்க புகாரி
-சுரேஷ்பாபு
INIYA VANANAKANGAL.........
THANGALIN INDA KAVIDI VEGU ARUMAI..
MOUNATHAYUM PENNIRKU ETHIRAI PYAN PADUTHUM INDA SAMUDAYATHIRKU UNGAL ELUTHUKKAL VITHIYASAMAGA KOODA THERIYALAM...
NANRIGAL INDA PATHIVIRKU.....
VALTHUKKALUDAN,
ILANTHENDRAL.....
புன்னகையே புதிராய்
விழிவீச்சே கேள்வியாய்
நாணமே நழுவுதலாய்
விளையாடுமே பெண்ணுளம்
எவ்வளவு இயல்பாக சொல்லிவிட்டீர்கள். புரிந்து கொண்டவர்களால் மட்டுமே இப்படி எழுத முடியும். 100% உண்மையை சொல்லியுள்ளீர்கள்.
சரியான சாவி தேடி
அவள் அவளை
அவளாகவே திறக்கும்வரை
அன்பளித்துக் காத்திருப்பதே
நல்ல ஆண்மை
அற்புதம். பெண்கள் சார்பில் என் நன்றிகள்.
அன்புடன் ஆயிஷா
பெண்னின் மனம் இருக்கிறதே... என்ன சொல்ல... சொல்ல வேண்டியதை எல்லாம் தெளிவாக ஆசானே சொல்லிவிட்டீர்கள்.. நான் சொல்ல என்ன இருக்கிறது...
மேகத்திற்கும் சூரியனுக்கும்
வானவில் பிறக்கும்
அதிசயம்போல்
மிகவும் அருமையான உவமை ஆசான்
அன்பின் புகாரி,
மெளனமே வார்த்தையால் ஒரு பாட்டுப்பாடவேண்டும்
என்றார் கவியரசர்.
உங்கள் அழகான கவிதையின் ஆழ்மான அர்த்தங்கள் அந்தக் அற்புதக் கவ்ஞரின்
வார்த்தையலங்காரத்தை ஞாபகமூட்டி நிற்கிறது.
புதுக்கவிதைப் புயல் புகாரியின் கவிவீச்சுக்கு ஈடு கொடுக்க முடியுமா?
அன்புடன்
சக்தி
Post a Comment