உன் வெறுப்பை உண்டு நாக்கு தள்ளுகிறேன்
மறதியை நினைத்து நினைவிழக்கிறேன்
பழிச்சொல் தீண்டி நீலம் பாரிக்கிறேன்
என்றாலும்
உன் கண்களை கடந்து
என்னால் வெகுதூரம் செல்ல முடியாது
உன் புன்னகையை பிரிந்து
என்னால் விடைகொள்ள முடியாது
உன் காதலை மறந்து
என்னால் புதைந்துபோக முடியாது

3 comments:

சாந்தி said...

நிதர்சனம் வாழ்வில்..

பூங்குழலி said...

என்றாலும்
உன் கண்களை கடந்து
என்னால் வெகுதூரம் செல்ல முடியாது

அழகான வரிகள்

thurka said...

வலிகள் நீளும் போது வார்த்தைகளும் உயிர் கொள்ளும். அதன் வீரியம் காதலின் போதான வார்த்தைகளிலும் அதிகம். உங்கள் கவிதைகள் என் மனக் காயங்கள் ஆற்றுகின்றன. உணவாகப் புசிக்க ஆரம்பித்திருக்கின்றேன். நிறைந்து வழிகின்றன மனமும் உயிரும்.