காதல் என்பது ஒரு பரிட்சை
காத்திருப்பது மகிழ்வைத் தரவேண்டும்
தந்தால் போட்டுக்கொள் ஒரு மதிப்பெண்
காக்க வைக்கும்போது உயிர் துடிக்கவேண்டும்
துடித்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்

பிரிந்தபோது காதல் உயர்ந்திருக்க வேண்டும்
உயர்ந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்
எப்போது தொடும்போதும்
இப்போதுதான் முதன் முதலில் தொடுவதுபோல்
சிலிர்க்கவேண்டும் சிலிர்த்தால் போட்டுக்கொள்
இன்னொரு மதிப்பெண்

பேசப் பேசத் தீராமல் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
இருந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்
மௌனத்தில் அமரும்போதும் விழிகள் கோத்துக்கொண்டு
உள்ளுக்குள் பேசிக்கொண்டே இருக்கவேண்டும்
இருந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்

முத்தத்தைத் துவங்கினால் முடிக்கவே கூடாது
முடிக்காமலிருந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்
மோகத்தில் எரியும்போது உயிர்தான்
முதலில் நனையவேண்டும்
நனைந்தால் போட்டுக்கொள் இன்னொரு மதிப்பெண்

வெளியில் புத்திசாலியாகவும்
காதலியிடம் முட்டாளாகவும் இருக்கவேண்டும்
இல்லாவிட்டால் கழித்துவிடு
இதுவரை போட்ட அத்தனை மதிப்பெண்களையும்
இன்னும் இரு மடங்கையும்

10 comments:

துரை said...

ஆசானே.....

நான் பாசாயிட்டேடேன் , நான் பாசாயிட்டேன்.........

அன்புடன் புகாரி said...

அப்ப நான் தான் பெயிலு :)

பூங்குழலி said...

வெளியில் புத்திசாலியாகவும்
காதலியிடம் முட்டாளாகவும் இருக்கவேண்டும்
இல்லாவிட்டால் கழித்துவிடு
இதுவரை போட்ட அத்தனை மதிப்பெண்களையும்
இன்னும் இரு மடங்கையும்

மிக மிக ரசித்தேன் இந்த வரிகளை .....

//நான் பாசாயிட்டேடேன் , நான் பாசாயிட்டேன்.........//

:))))))))

அன்புடன் புகாரி said...

> வெளியில் புத்திசாலியாகவும்
> காதலியிடம் முட்டாளாகவும் இருக்கவேண்டும்
> இல்லாவிட்டால் கழித்துவிடு
> இதுவரை போட்ட அத்தனை மதிப்பெண்களையும்
> இன்னும் இரு மடங்கையும்
>
> மிக மிக ரசித்தேன் இந்த வரிகளை .....


ஒரு பெண்வந்து இதைச் சொன்னதும் எனக்குப் பேரானந்தம்தான்! நன்றி பூங்குழலி> நான் பாசாயிட்டேடேன் , நான் பாசாயிட்டேன்.........
>
> :))))))))

துரையின் காதலி காதில் விழுந்து தொலைக்கப்போவுது :)

ஆயிஷா said...

அனுபவித்து எழுதியுள்ளீர்கள் ஆசான். ரசித்தேன். மகிழ்ந்தேன்.

அன்புடன் ஆயிஷா

அன்புடன் புகாரி said...

> அனுபவித்து எழுதியுள்ளீர்கள் ஆசான். ரசித்தேன். மகிழ்ந்தேன்.


ஆம் ஆயிஷா, அனுபவித்துத்தான்
சிலவற்றை என் சொந்தக் கதையில்
சிலவற்றை என் கற்பனையில்
சிலவற்றை என் சிந்தனையில்

சிவா said...

என்னோட மதிப்பெண்கள் பூஜியத்திற்கும் கீழே போய்விட்டது :)
சரி .. இன்னொரு கணக்கை ஆரம்பிக்க வேண்டியது தான் :)

சீனா said...

மதிப்பெண் பெற இத்தனை செய்ய வேண்டும் - ஆனால் மதிப்பெண்கள் குறைய ஒன்றே ஒன்று செய்யாமல் இருந்தால் போதுமாம்

அதனைத்தான் அத்தனை ஆண்களும் கவனமாகச் செய்கிறார்களே - அல்லது செய்வது போல் நடிக்கிறார்களே

புன்னகையரசன் said...

நல்லா சொன்னார்ப்பா கணக்கு வாத்தியார்....

நல்ல கணக்கு... நான் பாஸானேன்... ஆனா பெயில் ஆயிட்டேன்....

அழகு ஆசான்... வாழ்த்துக்கள்...

சபூர் ஆதம் said...

அழகாக சொல்லிருக்கிங்க.. ஆனா இவைகள் எல்லாமே கலியானத்துக்கு முன்னரா? அல்லது பின்னா :) என்று சொல்லவே இல்ல.. அதையும் சொல்லிவிடுங்கள் ஆசான்.
:)
சபூர் ஆதம்