இதழ்களின்
மொழிகளைப்போல
இதயங்களின் மொழிகளும்
வேறுவேறு

இறுகிக்கிடக்கும்
எந்தவோர் இதயத்தையும்
அதன் பிரத்தியேக மொழியறிந்த
இன்னோர் இதயத்தால் மட்டுமே
தட்டியெழுப்ப முடியும்

இதய மொழியறிந்த
இதயங்களைச்
சேகரித்து வாழ்வதே
இதய வாழ்க்கை

2 comments:

புன்னகையரசன் said...

இதழ்களின்
மொழிகளைப்போல
இதயங்களின் மொழிகளும்
வேறுவேறு

உண்மை


இறுகிக்கிடக்கும்
எந்தவோர் இதயத்தையும்
அதன் பிரத்தியேக மொழியறிந்த
இன்னோர் இதயத்தால் மட்டுமே
தட்டியெழுப்ப முடியும்


ஆமாம்


இதய மொழியறிந்த
இதங்களைச்
சேகரித்து வாழ்வதே
இதய வாழ்க்கை

தட்டச்சு பிழையாயினும் இதங்கள் பொருந்துவதாய் தோன்றுகிறது எனக்கு...

வாழ்த்துக்கள் ஆசான்...

சிவா said...

அற்புதம் ஆசான்